இரா முருகன் பற்றி ஆத்மார்த்தி

அன்புள்ள ஜெயமோகனுக்கு

வணக்கம். நலம் தானே!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதம் தோறும் முதல் சனிக்கிழமையன்று ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் வாசிப்புக் குழுவின் மூலம் தமிழில் சிறந்த படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களைக் குறித்து கூகுள் மீட் சந்திப்பின் வழியாக  இலக்கிய ஆய்வுரையினை நடத்திக் கொண்டு இருக்கிறோம். உங்களது கவனத்திற்கும் வந்து இருக்கும் என்று நம்புகிறேன். ஏற்கனவே நவம்பரில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்த எழுத்தாளர் காளிப்ரஸாத் ஆற்றிய உரையினை உங்களது தளத்தில் வெளியிட்டதன் மூலம் அது பரவலான கவனத்தைப் பெற்றது.

இதுவரை எழுத்தாளர் எம்.வி.வி குறித்து கவிஞர் ரவிசுப்ரமணியனும்,  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்து எழுத்தாளர் காளிப்ரஸாத்தும், எழுத்தாளர் இமையம் குறித்து  எழுத்தாளர் சுரேஷ் பரதனும், எழுத்தாளர்

வண்ணாதாசன் குறித்துp பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவனும், எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்து எழுத்தாளர்  ஜா.ராஜகோபாலனும், எழுத்தாளர் இரா.முருகன் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தியும் உரையாற்றினார்கள். சிறப்புரையைத் தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்விலும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

எழுத்தாளர் இரா.முருகன் குறித்து எழுத்தாளர் ஆத்மார்த்தி ஆற்றிய உரையின் லிங்கை உங்களது பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=GziLcH7gCao

பிற எழுத்தாளர்களைக் குறித்த உரைகளையும் யூ ட்யுபில் காணலாம்.

மந்திரமூர்த்தி அழகு

முந்தைய கட்டுரைஇலக்கியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதைகள் இணைய இதழ்