யானைடாக்டர் வாசிப்பு

யானை டாக்டர் – என்னை போன்ற சிறுவர்கள் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இது.

கதை : ஒரு வன அலுவலருக்கும், யானை டாக்டருக்கும் உள்ள நட்பு பற்றியது இந்தக் கதை. அதை வைத்து நமக்கு யானை டாக்டரின்  வாழ்க்கையை பற்றி சொல்லியிருக்கிறார்கள். கூடவே யானைகள் படும் கஷ்டங்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

யானை டாக்டர் புத்தகத்தில் நான் கற்றுக்கொண்டவை :-

* நான் என் அம்மா cauliflower வெட்டும் பொழுது நிறைய புழுக்கள் பார்த்திருக்கிறேன். அதை பார்க்கும் பொழுது அருவருப்பாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் அதுவும் ஒரு உயிரினம் தான் என்று யானை டாக்டர் புரிய வைப்பார். புழுவை கூட கைக்குழந்தை என்பார்.

* இந்த புத்தகத்தில் உடைந்த glass bottles யானையின் காலை குத்தி அதை காயப்படுத்துகிறது என்று அறிந்தேன்.  மேலும் நான் சென்ற திருவிழாவில் ஏழு மணிக்கு தூங்கும் யானையை ஒரு மணி வரை முழிக்க வைத்திருந்தார்கள். இதைப் போன்ற தீமைகள் நாம் செய்ய கூடாது

*நான் Sherni என்ற படம் பார்த்தேன். அதில் வித்யா பாலன் வன அலுவலராக வருவார். இந்த புத்தகத்தில் வரும் வன அலுவலரை வித்யாபாலனை போல நினைத்து படித்தேன். இன்னும் சுவாரசியமாக இருந்தது.

*டாக்டர் கிருஷ்ணமூர்த்தி:

வனத்துறையின் மிருக டாக்டர். காட்டு மிருகங்களுக்கும் பழக்கப்பட்ட மிருகங்களுக்கும் மருத்துவ உதவி அளிப்பது அவரது வேலை. யானைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். முன்னூறுக்கும் மேல் யானைகளுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். நூற்றுக்கணக்கில் யானை சடலங்களை சவப் பரிசோதனை செய்திருக்கிறார்.

யானை டாக்டர் பற்றி நான் என்ன சொல்வது. இந்த புத்தகத்தை நாம் படித்தாலே தெரியும் மிருகங்கள் அவர் மேல் காண்பிக்கும்  அன்பு பற்றி. கிளைமாக்ஸ் சீன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஒரு யானை கூட்டமே அவரைத் தேடி வரும்.

சின்ன புத்தகம் இது.ஆனால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.ஜெயமோகன் அவர்களின் எழுத்து எப்போதும் போல அருமையாக இருந்தது.

நன்றி

ரியா ரோஷன்

முந்தைய கட்டுரைவெண்முரசை தொடங்குவது…
அடுத்த கட்டுரைகுழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்