நான் கடவுள், இன்னும்

 அன்புள்ள ஜெ,

நான் கடவுள் விமரிசனங்களை மீண்டும் திரட்டி அளித்திருக்கிறேன். நீங்கள் பிறகு இவற்றை படித்துப்பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் ஒரு நண்பருடன் இன்று மதியம் உதயம் அரங்குக்கு போனேன். அங்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நல்ல கூட்டம் இருந்தது. மாலைக்காட்சிக்கு டிக்கெட் எடுத்து பார்த்தேன். இப்போது பொதுவாக படத்தை கவனமாகப்பார்க்கும் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

 

 

நீங்கள் படத்தைப்பற்றி பேச விரும்பவில்லை என்று சொன்னீர்கள். அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஏராளமான வசனங்கள் சம்ஸ்கிருதத்திலேயே இருப்பதனால் பொதுவாக ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல எனக்கு சினிமாவைப்பற்றி நிறைய கருத்துக்கள் உள்ளன. முக்கியமாக நான் பத்தாண்டுகளாக சினிமாவில் வேலைபார்ப்பவன் என்பதனால் இந்த இணைய விமரிசனங்களில் பலர் சினிமாவை எடுப்பவரின் கோணத்தில் ஷாட், பிஜிஎம் , லைட்டிங் எல்லாம் தெரிந்ததுபோல பேசியிருப்பது அபத்தமாக இருக்கிறது என்று தோன்றியது. டிவிடி பார்த்து சினிமாவின் டெக்னிக் தெரிந்தது போல சொல்லிக்கொள்கிறார்கள். ரசிகர்கள் தங்களை ரசிகர்களாக மட்டுமே எண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?

 

சண்முகம் குமரவேல்
[தமிழாக்கம்]

அன்புள்ள சண்முகம்,

 

 

உங்கள் கடிதம். நீங்கள் எனக்கு என் படைப்புகள்– இந்த இணைய தளம் பறி இதுவரை ஒரு கடிதம்கூட எழுதவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி, நான் கடவுள் வேகம் இன்னும் கொஞ்சநாள்தான். அதன்பின்னர் இந்த இணையதளத்தையும் பிற கட்டுரைகளையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். நீங்கள் சினிமாவைச்சேர்ந்தவர் என்பதை இத்தனை கஷ்டப்பட்டு இவற்றை நீங்கள் சேகரித்த போதே தெரிந்துகொண்டேன்

 

 

சினிமா ஒரு வெகுஜனக் கலை. 50 ரூ கொடுத்து அதை பார்ப்பவர்களுக்கு எல்லாம் அதைப்பற்றி பேச உரிமை இருக்கிறது. அப்படிபேசுவதும்கூட ஒருவகை ரசனைதான். இந்தப்படம் ஓடிக்கொண்டிருப்பதே பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எல்லாரும் இதைப்பற்றிப் பேசுவதனால்தான்

ஆரியாவுக்கு நிறைய தமிழ் வசனங்கள் இருந்தன. சொல்லிவிட்டேன் கடைசியில் சினிமாவில் என்ன எஞ்சுமென்பது கடவுள் கையில்தான்

ஜெ

 

 

 

http://poongulali.blogspot.com/2009/02/blog-post_858.html

http://www.webeelam.net/?p=376

http://urfriendchennai.blogspot.com/2009/02/blog-post_10.html

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=87

http://baluindo.blogspot.com/2009/02/blog-post_09.html

http://anjady.blogspot.com/2009/02/blog-post.html

http://rangolikannan.blogspot.com/2009/02/blog-post_09.html

http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t10095.html

http://nirushan-nirushan.blogspot.com/2009/02/blog-post_08.html

http://santhoshpakkangal.blogspot.com/2009/02/blog-post_09.html

 

நான் கடவுள்:மீண்டும் கடிதம்

நான் கடவுள், கடிதம்

மதுபாலா:கடிதங்கள்

மதுபாலா

 

முந்தைய கட்டுரைபழைய இலக்கியங்கள்:கடிதம்
அடுத்த கட்டுரைமத்தகம்:கடிதம்