அமெரிக்காவில் மரபின்மைந்தன்

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் அமெரிக்கா செல்கிறேன்.

ஏப்ரல் 21 முதல் 25 வரை டல்லாஸ்

ஏப்ரல் 26 முதல் 28 வரை சியாட்டில்

ஏப்ரல் இதில் 9 முதல் மே 2 வரை பே பகுதி

மே 3 முதல் 9 வரை சான் பிரான்சிஸ்கோ வாஷிங்டன் நியூஜெர்ஸி நியூயார்க் பகுதிகள் என்று பயணத்திட்டம் அமைந்துள்ளது

சில நிகழ்ச்சிகளும் உறுதியாகி உள்ளன. அங்கு இருக்கும் உங்கள் நண்பர்கள் சிலரை சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்.

நன்றி

அன்புடன்

மரபின் மைந்தன் முத்தையா

***

அன்புள்ள மரபின் மைந்தன்,

நானும் அமெரிக்கா செல்கிறேன். மே ஒன்று முதல் ஜூன் ஒன்று வரை. தேதிகள், நிகழ்ச்சிகள் ஏறத்தாழ முழுமையாக முடிவாகிவிட்டன. அருண்மொழியும் வருகிறாள்.

உங்கள் பயணத்திட்டத்தை என் இணையதளத்தில் அறிவிக்கிறேன். மரபிலக்கியம் மீது, பக்தியிலக்கியம் மீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றால் இனிய அனுபவமாக இருக்கும்.

உங்கள் மின்னஞ்சலை அளிக்கிறேன். தொடர்பு கொள்பவர்களை எனக்கு தெரிவியுங்கள். அவர்கள் என் நண்பர்கள்தானா என்று சொல்கிறேன்.

([email protected])

ஜெ

முந்தைய கட்டுரைகண்மலர்தல் -கடிதம்
அடுத்த கட்டுரைஇலங்கைப் பொருளியல் நெருக்கடி-கடிதம்