OVER THE FIRE

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் அறிய ஆவல்.  Shadow Crow (நிழல் காகம்) வெளியிட்ட spillwords இலக்கியப் பத்திரிகை, இப்பொழுது  உங்களின் கதையான அனலுக்கு மேல், ஜெகதீஷ் குமார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய Over the Fire என வெளிவந்துள்ளது. Shadow Crow இந்தப் பத்திரிகையில் வந்தபொழுது, அடிக்கடி இந்தியத் துணைக்கண்டத்துக்குப் பயணம் செய்யும் மேற்கத்திய நாட்டவர் ஒருவர், இந்தக் கதையை ஆசிரியர் சிறு சிறு பகுதிகளாக எழுதியிருக்கலாம் என்று  சொல்லிவிட்டு, நான் யார் உலகத்தின் நீளமான நாவலை எழுதியவருக்கு அறிவுரை சொல்ல என்று பின்னூட்டம் செய்திருந்தார்.

அனலுக்குமேல் கதை, இலக்கியம் அதிகம் வாசிப்பவர்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களையும், நம்பிக்கைகளையும், கார்கோ கல்ட் போன்ற விஷயங்களையும் எடுத்து வைத்து, அது உருவாக்கும் படிமங்களை வாசகனை யோசிக்க வைக்கிறது. நான் எப்பொழுதும் போல் தமிழ் வடிவத்தை ஒரு பக்கமும், ஆங்கிலத்தில் வந்ததை ஒரு பக்கமும் வைத்து வாசித்துப் பார்த்தேன். ஜெகதீஷ், ஒவ்வொரு இடத்தையும், பெயர்களையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள்! என் ஆவல் அந்த மேற்சொன்ன மேற்கத்திய நாட்டு வாசகன் என்ன சொல்வார் என்பதுதான்.

அனலுக்கு மேல் கதையை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

Over The Fire

முந்தைய கட்டுரைஇலக்கியம் ஆய்வல்ல
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு – பதிவுகள்