நெல்லை புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. நெல்லை வ.உ.சி மைதானத்தில் நிகழ்கிறது. 110 விற்பனை அரங்குகள் கொண்டது.
நெல்லை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள் ரிதம் புக்ஸ் கடையில் கிடைக்கும். நற்றிணை, கிழக்கு, வம்சி உள்ளிட்ட மற்ற பதிப்பகங்களிலும் என் நூல்கள் கிடைக்கும்
25 ஆம் தேதி நிகழும் கூட்டத்தில் நான் பேசுகிறேன். யுவன் சந்திரசேகர், போகன் ஆகியோரும் அன்று பேசுகிறார்கள். அன்று காலை நெல்லைக்கு வருவது திட்டம்.