சிவனி சதீஷின் முதற்சங்கு

சிவனி சதீஷ் எனக்கு இருபதாண்டுக் காலமாக அறிமுகமானவர். கன்யாகுமரி மாவட்டத்தில் செயல்படும் உள்ளூர் அறிவியக்கம் ஒன்றின் குறிப்பிடத்தக்க ஆளுமை. நூல்வெளியீடுகள், இலக்கியக்கூட்டங்கள் என செயல்பட்டுக்கொண்டே இருப்பவர். எழுத்தாளர். இருபதாண்டுகளாக முதற்சங்கு என்னும் சிற்றிதழை நடத்திவருகிறார்.

சிவனி சதீஷ் 2000த்தில் தக்கலையில் தொலைபேசி நிலையம் அருகே முதற்சங்கு என்னும் புத்தக்கடையை நடத்திவந்தார். பல மாற்றங்களுக்குப்பின் முதற்சங்கு இப்போதும் வந்துகொண்டிருக்கிறது. இந்த இதழில் லக்ஷ்மி மணிவண்ணன் பேட்டி, குமார செல்வா கட்டுரை என இங்கிருக்கும் அறிவுஜீவிகளின் பங்களிப்புகள் உள்ளன.

முதற்சங்கு ‘புலம்பெயர்ந்து’ வாழும் குமரிமாவட்ட மக்களுக்கு மேலும் உவப்பானதாக இருக்குமென நினைக்கிறேன். அவர்களுக்கு குமரியின் தனித்தன்மை, ‘மண்வாசம்’ என்று சொல்வோமே அது, எல்லா பக்கங்களிலும் வெளிப்படும் ஒன்றாக இவ்விதழ் இருக்கும்.

சிற்றிதழ் அறிமுகம் முதற்சங்கு

ஆசிரியர் திரு.சிவனி சி சதீஷ்
முதற்சங்கு
த,​பெஎண்25 இரணியல் சா​லை
தக்க​லை 629 178
கன்னியாகுமரி மாவட்டம்
​கைப்​பேசி 9442008269

முதற்சங்கு

ஆண்டு சந்தா ரூபாய் 300
பக்கம் – 52

C.satheesh
A/C.no: 0566053000006091
South Indian bank
Thuckalay branch
IFSC : SIBL0000566

Google Pay – 9442008269

முந்தைய கட்டுரைநெல்லை புத்தகக் கண்காட்சி
அடுத்த கட்டுரைஎஸ்.வி.ராஜதுரையும் நானும்