பா.பிதலீஸ் நினைவுகள் – சே.ராகுல்

ஒளி வெள்ளம் பத்திரிகை ஆசிரியரை சந்திக்க 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை எழுத்தாளர் ராம் தங்கம் அழைத்து போனார் .அவர் நிறைய நபர்களை அறிமுகபடுத்தியது உண்டு இவரை போல் அவர் அறிமுகபடுத்திய நபர்களை நான் தேடி சென்று பார்ப்பது இல்லை .இவரை மட்டும் ஏன் நான் தொடர்ந்து சந்தித்தேன் என்றால் மிகவும் மனித நேயம் மிக்க ஒரு நபர். ஒளிவெள்ளம் என்ற பத்திரிகையை நடத்தி அது எல்லோருக்கும் விற்று காசு பார்ப்பதை விட முக்கியமாக அனைவரையும் வாசிக்க வைக்க வேண்டும் என எண்ணியவர் .அதன் மூலம் அவர் பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்துள்ளார் .மக்களுக்காகதன் வீட்டையை இவர் நூலமாக மாற்றியவர் , எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஐயா அவர்கள் வந்து அந்த நூலகத்தை திறந்து வைத்துள்ளார் .

நாம் எளிதில் அணுகும் விதத்தில் இருந்தது அவரது வாழ்க்கை அதன்பின் அவரை நிறைய முறை சந்தித்திருக்கிறேன் ஒளிவெள்ளம் புத்தகத்தை வாசிக்க தந்துள்ளார் .அவருடன் பலமுறை தொலைபேசியில் பேசி உள்ளேன் அப்போது உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார் .அவருக்கு என வாழாமல் இலக்கியத்தை வளர்க்க பொதுமக்கள் வாசிக்க வேண்டும் என எண்ணி அதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து பொருளாதாரத்தையும் இழந்த ஒரு நபர் .கடைசியாக போன வாரம் கூட வீட்டிற்கு போனேன் நினைவு தப்பி இருந்தது படுக்கையில் தான் இருந்தார் எவ்வளவு பேசியும் அவரால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை .அந்த அம்மாவிடம் கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறினேன்.அவர் படுக்கையில் விழுந்ததும் அந்த நூலகவும் விழுந்தது அவர் நலம் அடைந்ததும் அழைக்கச் சொன்னேன் நூலகத்தை தூசு தட்டி புத்தகத்தை பராமரிக்க உதவுவதாக வாக்குறுதி அளித்து வந்தேன் .

கடந்த முறை சந்திக்கும்போது சிறிய பழைய காலத்து ரேடியோ ஒன்றை எனக்கு அன்பளிப்பாக இருவரும் சேர்ந்து கொடுத்தார்கள்.இன்று அசைவற்ற அவரின் உடலை பார்த்ததிலிருந்து ஏதேதோ… சிந்தனைகள்

இப்படிப்பட்ட மனிதர்களை இந்த உலகம் எவ்வாறாக நினைவுகூரப்படும் ?பா.பிதாலிஸ் எம்.ஏ அவர்களை சமூகத்தில் என்னைப் போன்றவர்களின் ஒளிவெள்ளம் ஆகவே எப்போதும் நினைவுகூரப்படும் எப்போதும். புத்தகத்தை சுமந்து ஒவ்வொருவரும் மனதில் புத்தக வாசிப்பு எண்ணத்தை உருவாக்கிய எத்தனையோ முகம் தெரியாத மறைந்துபோன ஒளி வெள்ளத்தில் அவரும் கலந்துவிட்டார் .

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்

ரா.ராகுல் சே

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை வழக்கு, சட்டக்குறைபாடுகள் -கடிதங்கள்,
அடுத்த கட்டுரைநெடுஞ்சாலையில் ஓர் இடம்