ஒத்தைத் தறி முதலியார்

முதலியார் ஆண்டு கிடந்த அந்த வீட்டை இப்போது பார்ப்பதே பெரும் துக்கமாக இருந்தது. அவ்வளவாக பராமரிக்கப்படாத வாசலெங்கும் செடிகள் முளைத்து குப்பையடைந்து புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்டிடமாகக் கிடந்தது. வெகுநாட்கள் திறக்கப்படாததின் வீச்சம் கதவைத் திறந்ததுமே முகத்தில் அடிக்கும். பெருச்சாளிகள் குபீரென்று வெளிப்பட்டு மூலையிலிருந்து தாவி ஓடும். கூரை முழுக்கச் சிலந்தி வலைகளும், ஒட்டடைகளும் பின்னிக் கிடக்கும். காங்கிரீட் ஒட்டுகள் பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகள் மடங்கித் தொங்கும். இந்தப் புரட்டாசி அமாவாசைக்கு மட்டும முன்கூட்டியே சுத்தம் செய்துவிடுவார்கள்.

ஒத்தைத் தறி முதலியார்
முந்தைய கட்டுரைபனிமனிதனும் குழந்தைகளும்
அடுத்த கட்டுரைவிமர்சனங்களின் வழி