அளவை, இரண்டாம் இதழ்

நண்பர் ஈரோடு கிருஷ்ணன் நடத்தும் அளவை இணைய பத்திரிக்கையின் இரண்டாவது இதழ் (01.03.2022) வெளியாகிவிட்டது. சென்ற இதழுக்கு கிடைத்த வரவேற்பில் கிருஷ்ணன் உற்சாகமாக இருந்தார். பொதுவாக சட்டம் சார்ந்த விஷயங்களை எளிமையாக எழுதினால் அதற்கு வாசகர் வட்டம் இருக்கிறது.

இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன. மொத்தம் ஐந்து உரிமையியல் மற்றும் குற்றவியல் தீர்ப்புகள் தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளது.

ஈரோட்டின் மூத்த வழக்கறிஞர்களுள் ஒருவரான திரு.A.C.முத்துசாமி அவர்களின் நேர்காணல் இடம்பெற்று உள்ளது. முந்தைய இதழை படிக்க ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் இணைப்பு உள்ளது.

https://alavaimagazine.blogspot.com/?m=1