எழுத்தாளர் அசோக்குமாரின் இத்தொகுப்பிலுள்ள குதிரை மரம் என்ற கதையைப் படித்த பிறகு எழுந்த கனத்த மௌனத்தை எப்படியாவது கடப்பதற்காக என்னுடைய தர்க்க மனத்தில் இருந்து எழுந்ததுதான் இப்பதிவின் முதல் பத்தியிலுள்ள வார்த்தைகள். இருந்தாலும், நெசவையே தன் அகமாகக் கொண்ட கதைநாயகன் பிரபுராமின் படைப்புத் தன்மைக்கு முன் எந்த தர்க்கச் சொல்லும் வலிமையற்றுத் தான் போகிறது.