ரா.கிரிதரன் நூல்கள்

கிரிதரன் நான் எப்போதும் வியந்து நோக்கும் பொறாமை கொள்ளும் சிறுகதைகளை எழுதியவர். நாக்கில் பட்டதும் ‘சுர்ரென்று’ இருக்கும் துரித உணவின் உப்புச் சுவை போல ஒரு செயற்கையான நெகிழ்ச்சியே தமிழ்ச் சிறுகதையின் இன்றைய மையப்போக்கு என இந்த சமூக ஊடக வெளி நம்மை நம்ப வைத்துவிடும் அபாயம் நிறைந்த ஒரு காலத்தில் கனமான கதைக்கருக்களையும் அக்கருக்களை சிதைக்காத முதிர்ச்சியும் நிதானமும் கலந்த மொழிநடையும் இத்தொகுப்பினை பிரத்யேகமான ஒன்றாக மாற்றிவிடுகிறது. தமிழ்ச் சிறுகதை பரப்பின் மீதான நம்பிக்கையை மறு உறுதி செய்கிறது.

சுரேஷ் பிரதீப்

ரா.கிரிதரனின் இசை சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரைநிமிர்வு- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைபனிமனிதன் – வாசிப்பு