சுவரில் -கடிதங்கள்

சுவரில்…

அன்புள்ள ஜெ

இங்கு பெங்களூரு பசவனகுடியில் வித்யார்த்தி பவன் என்று ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது. மசால் தோசை பிரசித்தம். பெரும்பாலும் கூட்டம் நிரம்பி வழியும். மற்றவர்களுக்கு எப்படியோ, மசால் தோசையை விட எனக்கு  அந்த ஹோட்டலின் சுவர்கள் மிகவும்  பிடிக்கும். கன்னடத்து இலக்கியவாதிகள் அனைவரும் ஓவியங்களாக சுவர்களை அலங்கரித்து இருப்பார்கள்.

‘இலக்கியம்  சோறு போடுமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் சோற்றால் நிரப்ப முடியாத ஓரிடத்தை இலக்கியம் நிரப்பும்’  என்ற உங்களின் வார்த்தை நினைவுக்கு வரும்.

இலக்கிய ஆர்வலர்கள் யாவருக்குமான முன்னுதாரணம். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே சார்ந்திராமல் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அன்பர்கள் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தங்கள் அபிமானத்தை இப்படியாகவும் வெளிப்படுத்தலாம்.

அன்புடன்

அ. ராஜ்குமார்

அன்புள்ள ஜெ,

சுவரில் என்ற கட்டுரையை படித்து ஒரு நிறைவு உருவானது. உங்களுக்கு அறுபது அகவை நிறையும்போது ஒரு கௌரவம் அது. கவிக்கோ மன்றம் வாழ்த்துக்குரியது. என்னுடைய அறையின் சுவரில் உங்கள் படம் இருக்கிறது. படத்தால் என்ன? அது ஒரு ப்ரசன்ஸ். அது நமக்கு நம்முடைய சாராம்சமான சில விஷயங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

அரவிந்த்

முந்தைய கட்டுரைகிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2
அடுத்த கட்டுரைநினைவுகளை அசைபோடுதல்