பூவன்னா சந்திரசேகர், கடிதம்

எழுத வருபவர், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். பூவன்னா சந்திரசேகர் அவர்கள் உங்களுக்கு எழுதிய கடிதம் மற்றும் அவரது “அச்சாரம்” சிறுகதையையும் படித்தேன். அருமையான கதை. இதை போன்ற மண்ணின் மனத்தை பிரதிபலிக்கும் கதைகள் நம்முடைய அடையாளம் என்று நினைத்து கொள்வேன். நான் விமர்சனம் பண்ண கூடிய அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. எனவே கதை எனக்கு பிடித்திருக்கிறது என்பதை தவிர ஒன்றும் சொல்ல தெரியவில்லை. வாழ்த்துக்கள்

பூவன்னா சந்திரசேகர். மேலு‌ம் மேலும் எழுதுங்கள். உங்கள் பதிலும் மனதில் நிற்கிறது. “நீங்கள் எழுதவேண்டும் என உள்ளூர விரும்பினால் அதில் சமரசமே செய்துகொள்ளவேண்டாம்” இது எல்லாருக்கும் பொருந்தும் என்று ஒரு பொது பதிலாக எடுத்து கொள்கிறேன். நாம் எங்கு இருக்கிறோமோ அங்கிருந்தே நம் பயணத்தை தொடர வேண்டும் என்பது போல. நன்றி!

சத்ய நாராயணன்,

ஆஸ்டின்,

டெக்ஸஸ்

அன்புள்ள ஜெ

பூவன்னா சந்திரசேகரின் கதை வாசித்தேன். எளிமையான கதை. ஆனால் ஒருவர் அடிப்படையான ஆவலுடனும் தயக்கத்துடனும் இலக்கியத்திற்குள் நுழைவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. கதையிலிருக்கும் பாசாங்கில்லாத நேர்மை பிடித்திருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும். எப்போதும் தன்னுள் இருந்து எழும் தூண்டுதலுக்கே முதலிடம் அளிக்கவேண்டும். வாழ்த்துக்கள்

அப்துல் நாசர்

முந்தைய கட்டுரைஆழத்தில் விதிகள் இல்லை- அசோகன்
அடுத்த கட்டுரைமகிழ்ச்சியான முடிவு?