விஷ்ணுபுரம் விழா, கடிதம்

0அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

நலமே வேண்டுகிறேன். கடந்த டிசம்பரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் முதன் முறையாக கலந்து கொண்டேன். சிவராஜ் அண்ணா ஸ்டாலின் அண்ணாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்களே எனக்கு தூண்டுதலாக இருந்தவர்கள். இரண்டு நாள் நிகழ்வையும் முழுதாக பங்கேற்க வேண்டும் என்று நானும் வேலாயுதம் பெரியசாமியும் சேர்ந்து கோவை வந்துசேர்ந்தோம். எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி வந்தோன்.எனக்கு உங்களை பார்க்கலாம், மேலும் குக்கூ நண்பர்கள் இருப்பார்கள் என்ற எண்ணம். ஆனால் விழா என் எதிர்பார்ப்பை தாண்டியதாகவே இருந்தது. என்ன எதிர்பார்த்திருந்தாலும் அது குறைவு என்ற எண்ணமே இருந்திருக்கும். எனக்கு மனதளவில் விஷ்ணுபுரம் விழா மிகவும் இதமான விழா. அவ்வாறு தான் அங்கே எல்லாமே இருந்தது.

எனக்கு விழா முடிந்த பிறகு உங்கள் அருகமைவில் ஏற்பட்ட அனுபவமே மறக்க முடியாததாக அமைந்தது. பலமுறை உங்கள் அருகமைவில் இருப்பதற்கான வாய்ப்பினை தவறவிட்டுவிட்டேன். இந்த முறை அவ்வாறு நடந்துவிட கூடாது என்ற எண்ணம் இருந்தது.விழா முடிந்து மறுநாள் காலை புறப்பட தயாரானேன். நீங்கள் காலை நடைக்கு கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். நானும் எல்லோருடன் சேர்ந்து கொண்டேன். காலையில் அப்படி ஒரு மகிழ்வான கலந்துரையாடலுடன் நடை மற்றும் டீ. நடை முழுதும் சிரிப்பொலிகள். பிறகு மற்றோரு விடுதிக்கு நீங்கள் செல்வதாகவும் அங்கே மலை வரை இருப்பீர்கள் என்றார் நண்பர். மேலும் சிறிது நேரம் உங்களுடன் இருந்து விட்டு போகலாம் என்று அங்கே வந்தேன். அங்கு தொடங்கிய உரையாடல் ஒரு வாசிப்பு போல் இருந்தது.நான் நாளை 6 மணிக்கு புறப்பட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் மாலை 4 மணிக்கே என்னால் புறப்பட முடிந்தது. மனதளவில் இதமாகவும் மிகவும் மகிழ்வானதாகவும் அந்த சூழல் அமைந்தது. பல நேரங்களில் உங்கள் இணையத்தில் கதைகள் கட்டுரைகள் படிக்கும் போது எல்லாவற்றையும் மறந்து அதிலே இருந்ததுண்டு. அதேபோல் இதுவும் எனக்கு நீண்ட கட்டுரையை வாசித்தது போலவே உணர்ந்தேன்..அருகமைவில் உரையாடலில் இருந்த நேரம் எந்த வகையிலும் சோர்வை ஏற்படுத்தவில்லை. என்னை அந்த இடத்தில் புதியவனாக எண்ணவே முடியவில்லை. அளவு மிகுந்தால் திகட்டிவிடுமோ என்ற எண்ணம் மட்டும்  ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. இனி  அப்படி நிகழமுடியாது.மனதளவில் உங்கள் அருக்கமைவு எல்லா வகையிலும் குருவின் அருகமைவே. தோன்றியதை எழுதியிருக்கிறேன்.வணங்குகிறேன்.

 

இப்படிக்கு

மோகன் தனிஷ்க்

சின்னாளப்பட்டி

முந்தைய கட்டுரைபோரும் அமைதியும் மொழியாக்கங்கள்
அடுத்த கட்டுரைஜடம்- கடிதங்கள்