சமந்தாவின் நடனம் -கடிதங்கள்

ஊ அண்டவா மாமா!

அன்புள்ள ஜெ

ஊ அண்ட வா மாமா நடனத்தின் வேர்களை சிந்து சமவெளியில் பார்க்கலாம். சிந்து சமவெளி சிற்பங்களில் இடுப்பில் கைவைத்து நிற்கும் நடனக்காரி அப்படியே சமந்தா மாதிரி இருக்கிறார்

கிருஷ்ணன்

ஈரோடு

அன்புள்ள ஜெ

ஊ அண்ட வா மாமா ஒரு சுவாரசியமான கட்டுரை. ஒரு பாடலில் இருந்து வரலாறு சினிமா என்று பல திசைகளுக்கு விரிந்து சென்றது.அதன் அடுக்குகள் ஆச்சரியமளித்தன. குறிப்பாக தமிழின் குத்துப்பாட்டுகளுக்கும் கரகாட்டத்திற்கும் உள்ள தொடர்பும் ஊ அண்ட வா மாமாவுக்கும் ஜாத்ரா ஆட்டத்திற்கும் உள்ள தொடர்பும் ஆச்சரியமானவை.

இந்தவகையான ஆய்வுகளைச் சமூகவியலாளர்கள்தான் எழுதவேண்டும். ஆனால் இங்கே அப்படிப்பட்ட ஆய்வுகள் கண்ணில்படுவதில்லை. நாம் சாதாரணமாக பார்க்கும் விஷயங்களையே ஏதோ ஆய்வில் கண்டுபிடித்ததுபோல எழுதி வைத்திருப்பார்கள். இந்தச் சிறுகுறிப்பு உங்கள் பயணங்களும் தேடலும் எத்தனை விரிவானவை என்று காட்டுகின்றது

ஜெயரராமன்

 

அன்புள்ள ஜெ,

1970 வாக்கில் சென்னையில் காபரே நடனங்கள் உண்டு. நான் அன்று மது அருந்த நண்பர்களுடன் செல்லும்போது பார்ப்பேன். அன்று என் தொழிலுக்கு அது தேவையாக இருந்தது. 1971ல் சென்னையில் ஓர் ஓட்டலில் நடந்த நடனத்தில் ஆட்டக்காரி கரகாட்டம்போல ஆடினாள் என்று பார்வையாளர்கள் எழுந்து கலாட்டா செய்தார்கள். நான் இருந்தேன். அவர்கள் என்ன காரணத்தால் கலாட்டா செய்தார்கள் என்று புரியவில்லை. ஆங்கில இந்தியப்பெண்ணுக்கு பதிலாக உள்ளூர் பெண்ணை ஆடவைத்துவிட்டனர் என்று சத்தம்போட்டனர். காபரே நடனத்துக்கு அன்றைக்கு நூறுரூபாய் கட்டணம். கரகாட்டத்துக்கு ஐம்பது பைசா போட்டால்போதும். அவ்வளவு கலாச்சார வேறுபாடு இருந்திருக்கிறது

ராம்

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி- கடிதம்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் மேலும்…