ஆதீனம்:கடிதங்கள்

ஜெயமோகன்,

 

 

நீங்கள்மதுரை ஆதீனம் குறித்து எழுதியதைப் படித்தேன். நானும் சில வருடங்களுக்கு முன் அவர் பேச்சைக் கேட்கும் தண்டனையை அனுபவித்திருக்கிறேன். எந்த ஒரு தேர்ந்த அரசியல்வாதியையும் நாணிப் புறந்தள்ளி ஓடவைக்கக் கூடிய பேச்சு அவருடையது.. இன்னும் அவர் அப்படியேதான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது.

 

 

அதிலும் நீங்கள் தலையில் கைவைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சூப்பர். ஆயிரம் வரிகளாலும் சொல்ல முடியாத விஷயத்தை அந்த ஒரு படம் சொல்லிவிட்டது. கும்பகோணத்தில் கூட அப்படிப்பட்டபுகைப்பட தருணங்களைபதிவு செய்யும் ஜர்னலிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

 

 

அடுத்த முறை கும்பகோணம் வரும்போது சொல்லவும். என் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம். கொசுக்கடி இல்லாமல் பார்த்துக்கொள்வேன்!

 

 

அன்புடன்,

 

சண்முகநாதன்

 

மதுரை ஆதீனத்தைப் பற்றிய கட்டுரையும் படமும்  கண்டேன். உற்சாகமாக இருந்தது. அவர் அடிக்கடி இங்கே தஞ்சாவூருக்கு வருவார். நடராஜனை சோழ மகாராஜா என்றெல்லாம் புகழ்ந்து பேசுவார். சமீபத்தில் அவர் கழுத்தில் ஒரு நோட்டுமாலையை போடுவிட்டார்கள். மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே

அந்தப்படம் எடுத்த புகைப்படக்காரருக்கு ஒரு நோட்டுமாலை போட்டே ஆகவேண்டும்

 

செண்பகராமன்

 

அன்பு ஜெ

 

மதுரை ஆதீனத்துக்கு தமிழ் ஆராய்ச்சி வரலாற்றின் அழியாத இடமுண்டு . அவர் ஞானசம்பந்தரின் காலகட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டே செல்கிறார். 1500 வருஷம் என்றார் 200 என்றார் இப்போது 2500 என்கிறார். ஆதிக்குரங்கே ஞான சம்பந்தர்தான் என்று சொல்லாமல் கண்ணை மூடமாட்டார் என்று எண்ணுகிறேன்

 

சிவம் சுந்தரம்

 மதுரை ஆதீனம்

முந்தைய கட்டுரைநான் கடவுள், கடிதம்
அடுத்த கட்டுரைநான் கடவுள்:மீண்டும் கடிதம்