போழ்வும் இணைவும்- கடிதம்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

அன்புள்ள ஜெயமோகன்

சனிக்கிழமை இரவு முதலில் இணைவு கதையைத்தான் திறந்தேன். போழ்வு முன் தொடர்ச்சி கதையென இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போழ்வை இந்தபத்தி வரை https://www.jeyamohan.in/131030/ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி வாசித்து விட்டு தூங்கிவிட்டேன். ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி – இந்த வரியில் காந்தியை நினைத்துக்கொண்டேன். ஒரு கனவு வந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.நான் காந்தியை பார்க்க பைக்கில் சென்றேன். வாசல்படியில் பைக்கை ஏற்றி உள்ளே சென்றேன். காந்தி நின்று கொண்டிருந்தார். அவரிடம் நான் ஆங்கிலத்தில் உரையாடினேன்.உரையாடல் நினைவில்லை ஆனால் நன்றி சொன்னதாய் நினைவு. ஞாயிறு இரவு போழ்வின் மீதியையும், இணைவு கதையையும்  படித்து முடித்தேன்.இரண்டையும் ஒன்றாக படிக்கும் போது அதன் நுண் விவரணைகளை முழுதும் தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்.

சிறுகதையின் சாரம் கர்னல் சேமர்ஸ் மற்றும் டாக்டர் அலெக் பெய்ன்ஸ் இடையே நடக்கும் உரையாடல் மூலம் நன்றாக விளங்கியது.அந்த உரையாடலை வாசிக்கும்போது ஒரு முகம் எழுந்து வரும்.நமக்கு நன்றாக தெரிந்த முகம் காந்தி.எறும்பாக இல்லாமல் பருந்தாக இருந்து பிரிட்டிஷ் பேரரசின் வல்லமையை, அதன் நீதிதர்மத்தை, அதன் அரசியலை, மக்கள் அதன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதேசமயம் அதன் தீமைகளை, அதனால் இந்தியாவில் நடந்த பஞ்சத்தை அவரால் பார்க்கமுடிகிறது.பிரிட்டிஷ் பேரரசை வெல்ல இங்குள்ள மக்களுக்கு அதன் தீமையை புரியவைத்து அவர்களை அரசியல்படுத்தி மொத்தமும் தன்மேல் மட்டும் குவியாமல் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காந்தியை உருவாக்கி, அதிகார வல்லமையின் எல்லையை உணர்ந்து ஆன்ம வல்லமையை கொண்டு இந்திய மக்களை ஒன்றிணைத்தார்.அவர் செயல்முறை பரிணாமம் போல் மெதுவானது வலுவானது.தளவாய் வேலுத்தம்பியும், பத்மநாபன் தம்பியும் உயர்ந்த தனிப்பண்பு கொண்டவர்கள். அதற்காகத்தான் க்ரிஷ்ணப்பிள்ளையை கொன்றதற்காக வேலுத்தம்பி தன் தம்பி கையிலும், அண்ணனை கொன்றதற்காக உயிர்வாழ வாய்ப்பிருந்தும் பத்மநாபன் தம்பியும் உயிர்விடுகிறார்கள்.மொத்தப் பார்வையற்றவர்கள்.

இக்கதையின் சிறப்பம்சம் தளவாய் வேலுத்தம்பியை, பிரிட்டிஷ் பேரரசை வில்லனாய் காட்டவில்லை.மாறாக நம் போதாமையை, நம்மை இறுக்கி வைத்த பண்டைய விழுமியங்களை, புதிய காலத்திற்கு பொருந்தாத வீரம் மேல் கொண்டிருந்த அதீத பற்றை, புதிய உலகம் உருவாகிவிட்டதை உணராத நம் எறும்புப் பார்வையை கண்முன் காட்டுகிறது.

ஒரு ஆங்கில படத்தில் அல்லது சீரியலில் பார்த்த வசனம். What is rome? Rome is mob. அவர்களை அங்குள்ள அரசன் தங்களுக்கு வேண்டியவாறு ஆட்டி வைப்பான்.விளையாட்டு காட்டி கட்டி வைப்பான். Mob வார்த்தைக்கு கூகிளில் பொருள் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். கொல்லம் கண்டோன்மெண்டை தாக்கிய கூட்டம் ஒரு Mob.பின் வந்த நம் சுதந்திர போராட்ட தலைவர்கள் ஒழுங்கற்ற மக்கள் திரளை நெறிப்படுத்தி ஒற்றை திரளாக மாற்றியே வென்றார்கள்.

அன்புடன்
மோகன் நடராஜ்

முந்தைய கட்டுரைவேதாளம்- கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைஅபி 80- கவிதைச் சிறப்பு மலர்