விஷ்ணுபுரம் விழா, வெளியிடப்பட்ட நூல்கள்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

நூல் வெளியீடு விஷ்ணுபுரம் விழாவின் திட்டத்தில் இல்லை. ஆனால் நண்பர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இரண்டு நூல்களை வெளியிடலாமென எண்ணி நிகழ்ச்சிகளின் செறிவுக்கு நடுவே இடம் கண்டடைந்தோம். பலர் மீண்டும் நூல்களை வெளியிடும்படிக் கோரினர். ஆகவே யாவரும் பதிப்பக அரங்கிலேயே மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது. அவை இறுதியாக வந்து சேர்ந்த நூல்கள்.

எப்படியோ நூல்களை வெளியிடுவது தேவையாகிறது. இத்தனை இலக்கியவாசகர்கள் வந்து கூடும் ஓர் அரங்கில் நூல்களை வெளியிடுவது அளிக்கும் ஏற்பு எந்த எழுத்தாளருக்கும் ஆர்வம் அளிப்பதுதான். அடுத்த ஆண்டுமுதல் ஒருமணிநேரத்தை  ஆறு நூல்களை வெளியிடுவதற்காக ஒதுக்கலாம் என்று படுகிறது. ஆனால் எல்லா நூல்களையும் அவ்வாறு வெளியிட்டுவிடவும் முடியாது. அவற்றின் அடிப்படையான இலக்கியத் தகுதி முக்கியமானது. அவை நம் நண்பர்களால் வாசிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படவேண்டும்.

அத்துடன் ஒரு நிபந்தனையும் வைக்கலாமென படுகிறது. விஷ்ணுபுரம் விருந்தினராக வருபவர்களின் நூல்கள் அன்றி பிற நூல்களே வெளியிடப்படும். விருந்தினர்களின் நூல்கள் தனியாக காட்சிப்படுத்தப்படும். இது புதிய எழுத்தாளர்கள்மேல் கவனம் விழ வழிசெய்யவேண்டும். அவர்களுக்கே நூல்வெளியீட்டுவிழாவில் முன்னுரிமை அளிக்கப்படும். இதை குமரகுருபரன் விழா உட்பட விஷ்ணுபுரம் விழாக்கள் அனைத்திலும் கடைப்பிடிக்கலாம் என்றும் படுகிறது.

https://www.facebook.com/vishnupuram.vattam/

https://vishnupuramvattam.in

இம்முறை வெளியிடப்பட்ட நூல்கள் 

விஷ்ணுபுரம் விழா மேடையில் வெளியான நூல்கள்

ஆனந்த் குமார் எழுதிய ‘டிப் டிப் டிப்’ கவிதைத் தொகுதி. தன்னறம் வெளியீடு

வெளியிட்டவர் லக்ஷ்மி மணிவண்ணன்

பெற்றுக்கொண்டவர் சுபா, பொன்மணி

உரையாற்றியவர் ரம்யா

ரம்யா உரை, டிப் டிப் டிப் பற்றி

சுஷீல்குமார் எழுதிய சப்தாவர்ணம் [சிறுகதைத் தொகுதி]

லக்ஷ்மி மணிவண்ணன் உரை, சப்தாவர்ணம் பற்றி

வெளியிட்டவர் நாஞ்சில்நாடன்

பெற்றுக்கொண்டவர் நரேன்

உரையாற்றியவர் லக்ஷ்மி மணிவண்ணன்

சப்தாவர்ணம் வாங்க

கல்பனா ஜெயகாந்த் எழுதிய

‘இம்ம்’ என்றமைந்திருக்கும் ஆழ்கடல்’ [கவிதைத்தொகுதி]

வெளியிட்டவர் நாஞ்சில்நாடன்

பெற்றுக்கொண்டவர் ஜெயமோகன்

உரையாற்றியவர் மயிலாடுதுறை பிரபு

இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல் வாங்க 


யாவரும் அரங்கில் வெளியான நூல்கள்

ம.நவீன் எழுதிய சிகண்டி [நாவல்]

வெளியிட்டவர் – ஜெயமோகன்
பெற்றுக் கொண்டவர் – ஜா.ராஜகோபாலன்
முன்னிலை நாஞ்சில் நாடன்

கே.ஜே.அசோக்குமாரின் ‘குதிரைமரம்’ சிறுகதைத் தொகுப்பு

வெளியிட்டவர் – ஜெயமோகன்
பெற்றுக் கொண்டவர் – நாஞ்சில் நாடன்
முன்னிலை சுனீல் கிருஷ்ணன்

வைரவன் லெ ரா  எழுதிய ‘பட்டர் பி’ சிறுகதைத் தொகுப்பு

வெளியிட்டவர் – நாஞ்சில் நாடன்
பெற்றுக்கொண்டவர் – லஷ்மி மணிவண்ணன்.
————————————————————————————-
புகைப்படங்கள்:
சரண்ராஜ்
ராஜேஷ் உதயன்
மோகன் தனிஷ்க்
ஆனந்த் குமார்
முந்தைய கட்டுரைshadow crow
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- பாலாஜி ராஜு