என் உரைகளின் பிரச்சினைகள்

வணக்கம் ஐயா,

YouTube இல் வெந்து தணிந்த காடு ட்ரைலர் பார்த்து, அதை அலசி  பார்த்ததில், கதை by B Jeyamohan என்று பார்த்தேன். இன்னும் சற்று தேட நீங்கள் பிறந்த ஊர் திருவரம்பு என்று தெரியவர எனக்கு ஆர்வம் தூண்டியது. நான் எனது பதினான்கு வயது வரை அருமனை மற்றும் குலசேகரம் பகுதில் மாறி மாறி வாசித்தேன். ரப்பர் தோட்டங்களில் கிரிக்கெட் விழையாடிருக்கிறேன்.

தங்கள் மேடை பேச்சு மற்றும் பேட்டிகளை YouTube இல்  கேட்டு உங்களை பற்றி எனக்கு ஒரு ஐந்து நாட்களாக தெரியும் . நான் இந்த கடிதம் எழுதும்  காரணத்தை கடைசியில் கூறுகுறேன்.

நீங்கள் உங்கள் பேச்சில் பிறருடைய கருத்துகளையும் ஆமோதித்து, அது உங்கள் எண்ணத்துக்கு எதிர்மறையா இருந்தாலும் அதுயும் சரி தான் என்று வெளிப்படையாக எதிர்த்து ஆதரித்து உள்ளீர்கள். ( சீ  என்கின்ற மலையளத்து கதை).

“சாருவின் கலாட்டா கேள்விகளுக்கு ஜெயமோகனின் ஜாலியான பதில்” – இந்த காணொளில் எந்த கேள்விற்கும் தடுமாறாமல், கேட்குற எங்களுக்கு உங்கள் பதிலில் எந்த சமாளிப்பும் இல்லை என்று தோன்றியது. ராஜா மற்றும் பாரதி பாஸ்கர், திரு ரஜினி காந்த் அவர்களை பற்றி கேட்டயுடன், எனக்கு அவ்வளவு நட்பு இல்லை என்று உண்மையை சொன்னீர்கள்.

அமெரிக்கவில் கறுப்பின மக்கள் இன்னும் பல துன்பங்கள் படுகிறார்கள் என்று ஒரு காணொளில் சொல்லும் போது வியப்பாக இருந்தது, ஏனென்றால் நான் கேள்விப்பட்ட அமெரிக்கா “Black Lives Matter”.

சில காணொளி பார்த்தயுடன் உங்கள் பேச்சில் ஈர்க்கப்பட்டு மேலும் பல காணொளிகள் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் உண்டானது. மன்னிக்கணும் ஐயா உங்கள் எழுத்துகளை இன்னும் படிக்க ஆரம்பிக்காவில்லை. இரண்டு முறை வெண்முரசு படிக்க ஆரம்பித்து மேலே தொடரமுடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு தமிழ் புலமையில்லை, மற்றும் வாழ்க்கை அனுபவம், விமர்சனம் போன்ற விஷயங்களில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

நான் இந்த கடிதம் எழுதும் காரணம்,  நாம் எவ்வளவு தான் வேறு இடங்களுக்கு சென்றாலும் நமது உச்சரிப்புகளில் விளவங்கோடு உச்சரிப்பு கண்டிப்பாக இருக்கும். இது இயற்கையே. ஆனால் பலரும் அதை அப்படி பார்க்காமல் கேலி செய்யுறார்கள் . நாடுகடத்தப்பட்டால் ஆஸ்திரேலியா செல்ல விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்ல, உங்களுக்கு ஆஸ்திரேலியா சொல்ல வராது என்று YouTube கமெண்ட்  இல் ஒருவர்  கேள்வி எழுப்பிருப்பார்.

நீங்கள் மேடையில் சிறப்பாக  பேசினாலும் ஒரு சில வார்த்தைகள் அப்படியே விளவங்கோடு உச்சரிப்பு வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக “பெரிய” மற்றும் “நிறைய” ஆகிய இரு வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துகிறீர்கள், அப்படியே விளவங்கோடு உச்சரிப்புடன். இந்த இரு வார்த்தைகளின் உச்சரிப்புக்கு கொஞ்சம் கவனம் செலுத்தினால் நான் மிக மகிழ்ச்சி அடைவேன். இது என்னுடைய தாழ்மையான கருத்து.

இப்படிக்கு

வெந்து தணிந்த காடு மற்றும் விடுதலை ஆகிய படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,

 

Jerkin Kenneth

 

அன்புள்ள ஜெர்க்கின்

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. என் உச்சரிப்பில் மலையாளம் இருப்பதாக நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால் கல்குளம்- விளவங்கோடு மக்களுக்கு தெரியும், அது என் ஊரின் உச்சரிப்பு நெடி. அது என் அடையாளம். அதை மாற்றிக்கொள்ள நான் ஏதும் செய்வதில்லை. என் வாசிப்பு, உரையாடல் வழியாக இயல்பாக அமையும் மாற்றங்கள் வரட்டும்.

என் உச்சரிப்பில் நிறைய குறைகள் உண்டு. என் சொற்றொடர்களில் கடைசிப்பகுதியை மூச்சாக வெளிவிடுகிறேன். என் குரலுக்குப் பழகியவர்களால் மட்டுமே என் உரைகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஓர் அகவைக்குப் பின் எவரும் குரல், உடல் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடியாது. உடலும் அகமும் பழகிவிட்டிருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா -1
அடுத்த கட்டுரைஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு