அருணா ராய் வருக! – பாலசுப்ரமணியம் முத்துசாமி

Aruna Roy (2019)

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆஸஃப் அலியின் நினைவாக, 1946 ஆம் ஆண்டு பிறந்த தன் மகளுக்கு அருணா எனப் பெயர் சூட்டினார் தந்தை ஜெயராமன்.

சென்னையில் பள்ளிப்ப்படிப்பையும், தில்லியில் கல்லூரிப்படிப்பையும் படித்த அருணா ஜெயராமன், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரியாகச் சிலகாலம் பயின்ற அவர், சமுதாயத்தைச் சீர்திருத்த இளைஞர்கள் வரவேண்டும் என்னும் ஜெயப்ரகாஷ் நாரயணின் குரல் கேட்டு, வேலையை உதறிவிட்டு, தெருவில் இறங்கினார்.

தன் கல்லூரித் தோழரான பங்கர் ராயை மணந்து, அருணா ராய் ஆன, அவர் தன் கணவருடன் சில காலம் இணைந்து டிலோனியா என்னும் குக்கிராமத்தில் பணியாற்றினார். பின்னர், தனக்கான ஒரு சமூகக் கனவைச் சுமந்து, தேவ்துங்ரி என்னும் இன்னொரு கிராமத்துக்குச் சென்று, தன்நண்பர்கள் நிகில் டே, ஷங்கர் சிங் உடன், உழைப்பாளர், உழவர் சக்தி இயக்கம் (Majdoor Kisan Sakthi sabha) என்னும் முறைசாரா இயக்க்கத்தை உருவாக்கினார். இதில் தலைவர், தொண்டர் என்னும் பதவிகள் கிடையாது. அனைவரும், ஒரு வட்டமாக அமர்ந்து விவாதங்கள் செய்து முடிவு எடுக்கும் ஒரு குழுமுறை.. இது நமது மூத்த குடிகளான ஆதிவாசிக் குழுக்களில் உள்ள ஒரு உண்மையான ஜனநாயக முறை.

1987 ஆண்டு, ராஜஸ்தானில் வறட்சி நிவாரணக் கூலியாக 11 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் எனத் தொடங்கிய மக்கள் போராட்டம், வீதிகள் வழியே வளர்ந்து, 18 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் ‘தகலறியும் சட்டமாக’, மலர்ந்தது.

தேவ்துங்ரியில் இவரும் நண்பர்களும் வசிக்கும் இடத்தை, புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ரஜ்னி பக்‌ஷி, ‘பாபு குடில்’ (சேவாகிராமம்) போன்றது என அழைக்கிறார்.காந்தியைப் பார்த்திராத இக்கால மக்களுக்கு கண்முன்னே வாழும் காந்தி இவர்.

’மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ?, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ , என அதிகாரத்தின் எதிர்ப்புறம் நின்று எழும்பிய குரல்களின் வழிவந்த அருணா ராய் அவர்களின் கட்டுரைகளை, ‘அருஞ்சொல்’, தமிழில் வெளியிடுவது, மிக முக்கியமான தொடக்கம்.

வாழ்க!

பாலசுப்ரமணியம் முத்துசாமி

அஜித் தோவலின் ஆபத்தான கருத்து- அருணா ராய்


 

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

பங்கர் ராய்- கடிதங்கள்

அருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது, பழைய புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைA Fine Thread