விக்கிரமாதித்யனுக்கு விருது – கடிதம்

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யனுக்கு விருது வழங்கும் செய்தி வந்தது முதல் இன்றுவரை உங்கள் தளத்தில் அவரைப்பற்றி எவ்வளவு எழுதப்பட்டுள்ளது என்று பார்த்தேன். மலைப்பாக இருக்கிறது. இந்த சில மாதங்களில் எழுதப்பட்டவை அவரைப்பற்றி இதுவரை பேசப்பட்ட ஒட்டுமொத்த பக்கங்களைவிடவும் மும்மடங்கு இருக்கும். ஒரு விருது என்பது எழுத்தாளனை கொண்டாடுவது. அவனை முன்னிறுத்துவது. அதை உங்கள் தளம் மூலம் ஆணித்தரமாக நிறுவிவிட்டீர்கள்.

இன்றைக்கு ஒரு அபத்தமான சூழல் உருவாகியிருக்கிறது. முன்பு இலக்கியத்துக்குச் சிற்றிதழ்கள் இருந்தன. சினிமா, குடும்பம் எல்லாம் பேசும் இதழ்கள் இருந்தன. அரசியல் வம்புக்கு வேறு இதழ்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை. இன்றைக்கு சமூகவலைத்தளச் சூழலில் எல்லாம் ஒன்றுகலந்துவிட்டது. எல்லாம் ஒரே இடத்தில் பேசப்படுகின்றன. நக்கீரன் தவிர எதையும் வாசிக்க தகுதியற்ற ஒருவன் சுந்தர ராமசாமி என்ன கொக்கா என்று கேட்கிறான். சுஜாதாவா புதுமைப்பித்தனா சிறந்த எழுத்தாளன் என்று விவாதம் நடக்கிறது. ஒரு துறைபற்றி தெரிந்தவர்களும் அதைப்பற்றி அறிவே இல்லாதவர்களும் ஒரே இடத்தில் விவாதிக்கமுடியும் என்ற சூழல் மனிதகுல வரலாற்றிலேயே முன்பு இருந்ததில்லை என நினைக்கிறேன்.

இதை நீங்கள் முன்பே எழுதியிருந்தது ஞாபகம். நாம் பழைய தமிழ் நெட், திண்ணை இணையதளங்களில் 2000 வாக்கில் நிறைய விவாதித்திருக்கிறோம். அன்றைக்கு நானெல்லாம்  புதுவெள்ளம் வந்து எல்லாம் மேம்படப்போகிறது என்ற பரவசத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் தொழில்நுட்பக் காரன். எல்லா மதிப்பீடுகளும் மாறவேண்டும் என்று எழுதினேன். ஆனால் நீங்கள் நவீன இலக்கியம், சிற்றிதழ் இலக்கியம் வேறு வணிக எழுத்து வேறு என்ற பிரிவினையை முன்வைத்துக்கொண்டே இருந்தீர்கள். அன்றாடக் கட்சியரசியலையும் சிந்தனையையும் வேறுபடுத்தியே ஆகவேண்டும், இல்லாவிட்டால் சிந்திக்கவே முடியாதபடி கூச்சல்களால் மூடப்படுவோம் என எழுதினீர்கள்.

இன்றைக்கு நீங்கள் அஞ்சியதே நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு எந்தச் சிந்தனையையும் பேசமுடியாது. முச்சந்தி அரசியல்கூச்சல்களை மட்டுமே அறிந்தவர்கள் உள்ளே வந்து காழ்ப்புகளை கக்க ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு இலக்கியத்தின் அடிப்படைகளையே பேசமுடியாது. கமர்ஷியல் சினிமா, கமர்ஷியல் எழுத்து, கட்சி எழுத்து எல்லாவற்றையும் கலந்துகட்டி குழப்பிவிடுவார்கள். இந்த குழப்பத்திற்கு வெளியே ஒரு தனி வட்டமாக நீங்கள் தொடர்ச்சியாக இலக்கியமதிப்பீடுகளை மட்டுமே முன்வைக்கும் ஒரு அரங்கை உருவாக்கி பத்துப்பன்னிரண்டு ஆண்டுகளாக நடத்தி அதை நிலைபெறச் செய்திருக்கிறீர்கள். இது தமிழுக்கு உங்கள் மிகப்பெரிய கொடை. உங்கள் நண்பர்களுக்கு தமிழ் அறிவுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

விக்ரமாதித்யனுக்கு விருது அளிக்கப்படும்போது அவரைப்பற்றி இந்த சமூகவலைத்தளச் சூழலில் என்ன பதிவு இருக்கிறது என்று பார்த்தேன். வாழ்த்துக்கள் கூட கிடையாது. எவருக்கு எந்த விருது கிடைத்தாலும் அப்படித்தான். எந்த எழுத்தாளரையும் கூர்ந்து வாசிப்பதோ, விவாதிப்பதோ நடப்பதில்லை. ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எழுத்தாளரை வசைபாடுவதற்கு அத்தனை பாமரக்கூட்டமும் விழுந்தடித்துக்கொண்டு வருகிறது. இச்சூழலில் இந்த இணையதளத்தின் பக்கங்களில் தமிழின் ஒரு கவிஞர் நிறைந்து நிற்பதைக் காண பெரும் நிறைவு உருவாகிறது.

இதுதான் சாத்தியமானது. நம் சமூகத்துக்கு வம்புதான் தேவை. அந்த இடத்தில் கவிஞனோ கவிதையோ பேசப்படமுடியாது. கவிதையையோ இலக்கியத்தையோ கூட சல்லித்தனமான வம்புகளாக மாற்றித்தான் இவர்கள் பேசுவார்கள். அந்த சூழலை முழுக்க உதறிவிட்டு தனி வட்டங்களை உருவாக்கிக்கொண்டுதான் இலக்கியம் பற்றி நாம் பேசமுடியும். அழுத்தமான விவாதங்கள் நடக்கும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறீர்கள். புதிய இளைஞர்படை ஒன்று உருவாகி வந்திருக்கிறது. அது நம்பிக்கையூட்டும் செயல். இருட்டைக்கண்டு வருந்தாதே, முடிந்தால் விளக்கை ஏற்றி வை என்று சொல்லப்படுவதுண்டு. அதைச் செய்திருக்கிறீர்கள். நன்றிகள்.

ஸ்ரீராம்

விக்ரமாதித்யன் நூல்கள் 

விக்ரமாதித்யன் விக்கிப்பீடியா

விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா


விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்

விக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்

விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்

கவிப்பெரும்பழம்- கா.சிவா

எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்

நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி

ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்

மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்

இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா

கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ

கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன்  – ரவிசுப்பிரமணியன்.

எரியும் தீ -சௌந்தர்

செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு

உள்ளுலகம் – சக்திவேல்

பாலைச் சிறுபொழுது- கடலூர் சீனு

விக்ரமாதித்யன் எனும் சோதிடர்

விக்ரமாதித்யன் பேட்டிகள்

விக்ரமாதித்யன், கடிதங்கள்-16

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் கடிதங்கள்-15

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

விக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 9

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 8

விக்ரமாதித்யன், ஒரு மதிப்புரை

விக்ரமாதித்யன், விமர்சனங்கள்

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 7

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 3

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1

முந்தைய கட்டுரைவிக்கிப்பீடியாவுக்கு மாற்று
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விவாதமேடை -கடிதங்கள்