விஷ்ணுபுரம் விழா, வாசிப்புப் பரிந்துரைகள் பற்றி…

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருது விழா இன்று தமிழின் முக்கியமான இலக்கியத் திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. நான் முதல் முறையாக இதில் கலந்துகொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று திட்டமிட்டபிறகுதான் உங்கள் தளத்தை பிரத்யேகமாகக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எவ்வளவு படிக்கவேண்டியிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டது.

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் கோகுல்பிரசாத், காளிபிரசாத், ஜா.தீபா, சுஷீல்குமார்,எம்.கோபாலகிருஷ்ணன், திருச்செந்தாழை, செந்தில் ஜெகன்னாதன், சோ.தர்மன் என ஒர் எழுத்தாளர்கலின் பட்டியல்.இவர்கள் ஒவ்வொருவருக்கும் இணைப்புகள் வழியாக அவர்களின் படைப்புகளும், அப்படைப்புக்கள் பற்றிய கட்டுரைகளும் பேட்டிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

சிறப்புவிருந்தினர் ஜெய்ராம் ரமேஷ். அவருடைய நூல் தமிழில் வெளிவந்துள்ளது. அவரைப்பற்றிய கட்டுரைகள் அளிக்கப்படுகின்றன. சிறப்புவிருந்தினரான சின்ன வீரபத்ருடுவின் கவிதைகள், தெலுங்கு கவிதைகளின் வரலாறு என ஒரு வாசிப்பு சிலபஸ் வேறு

இத்தனைக்கும் முன்பாக விக்ரமாதித்யன் கவிதைகள். அவரைப்பற்றி எழுதப்பட்ட ஏராளமான கட்டுரைகள். இவ்வளவையும் வாசிக்கவேண்டியிருக்கிறது. இவ்வளவுபெரிய சிலபஸ் ஒரு இலக்கிய விழாவுக்கு என்பது பிரமிக்கச் செய்கிறது.

இதற்கும் மேல் தேவை என்றால் பழைய விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகள். ஆவணப்படங்கள். உரைகளின் காணொளிகள். வாசகர் கடிதங்கள் என்று இணைப்புகள் குவிந்துகிடக்கின்றன. ஒருநாள் ஒன்றரை மணிநேரம் வீதம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

நான் பெங்களூரிலும் டெல்லியிலும் இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவையெல்லாம் சம்பிரதாயமாகவே இருக்கும். இந்த விழாவின் இந்த பிரம்மாண்டமான அறிவுசார்ந்த முன்னேற்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. இவற்றையெல்லாம் வாசிக்கவேண்டுமே என்ற பதற்றமும் ஏற்படுகிறது. வாசிக்காமல் வரக்கூடாதா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆர்.ரவிச்சந்திரன்

 

அன்புள்ள ரவி,

விழாவுக்கு நல்வரவு,

இந்த வாசிப்புப் பரிந்துரை எதற்காக? விஷ்ணுபுரம் விழாவுக்கு அதிகாரபூர்வ விருந்தினர்கள் பதினொருவர். விருதுபெறுபவர் விக்ரமாதித்யன். மேலும் இருபது படைப்பாளிகளாவது இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். வாசகர்களாக அங்கே வருபவர்கள் அவர்களிடம் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தவேண்டும் என்றால் அப்படைப்பாளிகளின் இலக்கிய உலகில் அறிமுகம் இருந்தாகவேண்டும். உண்மையில் ஓர் எழுத்தாளரை சற்றேனும் படித்திருப்பது அளிக்கும் தன்னம்பிக்கை மிகமிக உதவியானது. உரையாடலே நிகழ்த்தவில்லை என்றாலும் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அருகே நின்று கேட்பதற்காகவாவது நாம் வாசித்திருக்கவேண்டும்

இலக்கியத்திற்குள் நுழைந்து பலகாலம் ஆனவர்கள் எல்லா படைப்பாளிகளையும் ஓரளவு வாசித்திருப்பார்கள் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எங்கள் விழாக்களில் இலக்கியத்துக்குள் அறிமுகமாகும் இளம் வாசகர்களும் பலர் வருவதுண்டு. அவர்களுக்கு ஓரு விரிவான அறிமுகம் அளிக்கவேண்டும் என்பதனாலேயே இந்தக் கட்டுரைகள் இணையத்திலேயே அளிக்கப்படுகின்றன. எப்போது வேண்டுமென்றாலும் வாசிக்கலாம். அந்த விழாவிலேயே அவர்களிடம் சென்று பேசுவதற்கு முன்பு அவசரமாகக்கூட வாசித்துப் பார்க்கலாம். இம்முறை அவர்களின் ஆக்கங்கள் ஒரே இணையப்பக்கமாக கிடைக்கும்படிச் செய்திருக்கிறோம்.[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க  https://vishnupuramguests2021.wordpress.com/]

எழுத்தாளர்- வாசகர் சந்திப்புகளை தமிழ்ச்சூழலில் சாகித்ய அகாதமி செய்துவருகிறது. அது ஒரு சிறுவட்டத்துக்குள் , சிறிய அளவில், மிக அரிதாகவே நிகழ்கிறது. அதைவிட்டால் விஷ்ணுபுரம் அரங்கே மிகப்பெரிய எழுத்தாளர் வாசகர் சந்திப்பு. தமிழ்ச்சூழலில் எழுதுபவர்கள் அனைவருக்குமே அவர்களை எவரேனும் வாசிக்கிறார்களா என்னும் ஐயம் உண்டு. அந்த ஐயம் எழுவதற்கான முகாந்திரமும் உண்டு. ஆகவேதான் இந்த அரங்குகள். இவற்றில் எழுதத்தொடங்கும் இளம்படைப்பாளிகள், அறியப்பட்ட படைப்பாளிகள் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி அமைத்துள்ளோம்.

இந்த கேள்விபதில் சிறப்பாக நிகழவேண்டும் என்றால் அரங்கில் பெரும்பான்மையினர் அப்படைப்பாளியை வாசித்திருக்கவேண்டும். குறைந்தபட்ச அறிமுகம் அனைவருக்கும் வேண்டும். ஆகவேதான் இந்த விரிவான படைப்புப் பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன. வாசித்தவர்கள் வினா எழுப்பி ஆசிரியர்களுடன் உரையாடவேண்டும், எஞ்சியோர் கேட்டுக்கொண்டிருந்தால்போதும் என்பது எங்கள் எண்ணம். அதையே அப்படைப்பாளிகளும் விரும்புவார்கள்.

மேலும், இப்படி ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அப்படைப்பாளிகளைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை அளிக்கலாமே என்றும் நினைக்கிறோம். எழுத்தாளரைப் பொறுத்தவரை வாசகர்களிடம் ஓர் ஆளுமை என அறியப்படுவதுதான் உண்மையான தொடக்கம். ஒரு கதையில் அவர் பெயரை கண்டதுமே வாசகர்கள் அவர் யார் என்று நினைவுகூரவேண்டும், உடனே வாசிக்கவேண்டும். இந்த அறிமுகங்களின் நோக்கம் அது.

வாசிக்காமல் வரலாமா? வரலாம். மௌனமாகக் கவனிக்கலாம். அதுவும் பயனுள்ளதே. ஆனால் வாசித்துவிட்டு வந்து உரையாடுவதே மெய்யாகவே இந்த நிகழ்வை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது

ஜெ

விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…

விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை

விஷ்ணுபுரம் விருதுகள் முழுப்பதிவுகள்

விஷ்ணுபுரம் விழா உரைகள்

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்

விஷ்ணுபுரம் விழா, ஒரு கடிதம்

விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…


விக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்

விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-4, ஜெயமோகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள் – ஜெயமோகன்

கவிப்பெரும்பழம்- கா.சிவா

எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்

நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி

ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்

மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்

இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா

கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ

கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன்  – ரவிசுப்பிரமணியன்.

எரியும் தீ -சௌந்தர்

செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு

உள்ளுலகம் – சக்திவேல்

பாலைச் சிறுபொழுது- கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை
அடுத்த கட்டுரைஜீவா நினைவேந்தல்: ஆளுமைக்கு மரியாதை