விஷ்ணுபுரம் விருது விழா, வருக!

விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது.

முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத், காளிப்பிரசாத், எம்.கோபாலகிருஷ்ணன், பா.திருச்செந்தாழை சுஷீல்குமார், செந்தில் ஜெகன்னாதன், ஜா.தீபா ஆகியோருடன் சிறப்பு விருந்தினரான சோ.தர்மனும் கலந்துகொள்கிறார். பார்க்க விஷ்ணுபுரம் விருந்தினர்கள்,2021

இந்த உரையாடல் அரங்கில் கலந்துகொள்பவர்கள் இப்படைப்பாளிகளை படித்துவிட்டு வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். எங்கள் அரங்குகளில் இலக்கியங்களை படித்துவிட்டு வந்து, அப்படைப்பாளியின் கருத்தை அறியும் நோக்குடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே இடம். [விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

மறுநாள் விருது வழங்கும் விழா. இரு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். பகலில் அவர்களுடனான சந்திப்பு. விக்ரமாதித்யனுடன் உரையாடல். மாலையில் விருது விழா.

விழா வழக்கம்போல ஒரு சிறு புத்தகக் கண்காட்சியும்கூட. தன்னறம், தமிழினி, யாவரும் பதிப்பகங்களுடன் விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களும் வாங்கக்கிடைக்கும். வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறேன்.

இம்முறை நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமானவர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். ஆகவே தங்குமிடத்திற்கான முன்பதிவு முடிந்துவிட்டது. முன்பதிவு செய்யாதவர்கள் வெளியே தங்களுக்கான தங்குமிடத்தை ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். முன்பதிவு செய்தவர்களில் எவரேனும் வராமலானால் மட்டுமே பிறருக்கு இடமிருக்கும்.

நிகழ்வுகளில் கலந்துகொள்ள முன்பதிவு தேவையில்லை. இருநாட்களிலும் பங்கேற்பாளர் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

https://vishnupuramvattam.in/

விஷ்ணுபுரம் விருதுவிழா பங்களிப்பு

விக்ரமாதித்யன் நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைநமது விமர்சன மரபு
அடுத்த கட்டுரைஇணைய மொண்ணைகள் -மேலும் கடிதங்கள்