புழுக்கள், கடிதங்கள்

புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்

அன்புள்ள ஜெ

புத்தனாகும் புழுக்கள் என்னும் தலைப்பில் உள்ள தங்கப்பாண்டியன் அவர்களின் கடிதத்தைப் படித்தேன். உங்களைப் போன்றே உங்கள் வாசகர்களும் மிகவும் மேன்மையானவர்கள். உங்கள் எழுத்து ஒருவனை எவ்வாறு ஆழமாக யோசிக்க வைக்கிறது என்பதை உணர்கிறேன். நானும் ஒரு புழுவாக மாறி உங்கள் சொற்களில் உள்ள சாரம் அனைத்தையும் உள்வாங்க வேண்டும். ஆனால் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பது போல உங்கள் எழுத்துக்களை இந்த ஜென்மத்தில் என்னால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் உங்களுடைய ஏதாவது ஒரு வரி போதும். ஒருவனை அவன் வாழ்நாள் முழுவதும் வழி நடத்துவதற்கு என்பதையும் உணர்கிறேன். உங்கள் எழுத்தின் மூலமாக இறை தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.அதைப் படிக்கும் பாக்கியத்தைத் தந்த இறைக்கும், தங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் , நன்றிகளும்..

பிரதீபா தீபா

***

அன்புள்ள ஜெ

சமீபத்தில் உங்கள் தளத்தில் நான் வாசித்த அருமையான ஒரு கட்டுரை, கடித வடிவில் வந்தது. மரு.தங்கபாண்டியன் எழுதிய புத்தனாகும் புழுக்கள். புழுக்களை அவர் வெவ்வேறு கவித்துவமான உயரங்களுக்கு கொண்டு செல்லும் விதம் எனக்கு பெரும் திகைப்பை அளித்தது. பலமுறை படித்த கட்டுரை அது. அதை ஒரு நீண்ட கவிதை என்றே சொல்லிவிடலாம். புழுக்களை படிமமாக ஆக்குகிறார். அப்படியே மேலெழச்செய்து மிக்ப்பெரிய ஒரு வாழ்க்கைத்தரிசனத்தை அளிக்கிறார்.

தங்கபாண்டியன் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும்

ஆரோக்கிய மரியதாஸ்

புத்தனாகும் புழுக்கள் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைசிறார் இலக்கியம்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவல்லினம், ஜனவரி 2022 இதழ்