புலி என்பது இங்கே படைப்பாளிக்கு காலமாகும். ‘இருளே! என்னை விழுங்கு!’ என்று காலத்தை நோக்கி அலறியவனின் அதே மண்ணில் அதிகாரமும், குடும்பமும், நாடும் இல்லாதவன் காலப்பெரும்புலிக்கு முன்னால் கீழடங்குகிறான். எழுத்தாளன் என்பவன் காலத்தின் முன்னால் மட்டுமே தன் படைப்பாற்றலை வைத்து அடிபணிய வேண்டும் என்று ஜெயமோகன் இக்கதையினூடாக மறைமுகமாக உணர்த்துகிறார்.
மொழியை அனுபவமாக்கும் ஜெயமோகனின் மாயப்பொன்: எம்.எல்.ஜானி