ஆலயம், கடிதங்கள்

ஆலயம் எவருடையது வாங்க

அன்பு ஜெ

மீண்டும் மீண்டும் சிற்பங்களின் சேதங்கள், கோவில்களின் பண்பாட்டு சிதைவுகள் , சிற்பங்களின் அழிவுகள், பக்தர்கள் கூட்டம் தரும் அழிவுகள் பற்றி உங்கள் தளத்தில் வருகின்றன. வாசகர்கள் கொதிப்புகளுடனும்.

ஈழ தமிழர்களுக்கான உதவி மற்றும் சிறுவர்களுக்கான கல்வி பற்றிய அரசின் செயல்பாடுகள் பற்றி படித்தேன். சில ஆசைகளாக, விருப்பங்கள் இவை

தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கீழ், புதிதாக தமிழ் பண்பாட்டு துறை(சிற்ப கோவில்கள்) என ஒன்றை தகுதி வாய்ந்தவர்களால் உருவாக்குதல்

விரைவாக தெளிவாக முக்கிய கோவில்களை அடையாளப்படுத்தி, இத்துறையின் கீழ் கொணர்தல்( unesco pola)

இவைகளில் சில கடுமையான சட்டங்களை உருவாக்குதல் ( சாரம், துளையிடுதல், உடைதல், சாரம் போன்ற கட்டுமான வேலைகளை செய்ய தடை  சிமெண்ட் வேலைகள் பற்றி ஆய்வுகள்  வெளிகளுக்குள் இருக்கும் சிலைகளை முறையாக பராமரிப்புகளை மண் பூச்சு இல்லாத வேறு பூச்சு முறைகள் ஆய்வுகள் என )

அரசாணை மூலம் இவைகளை செயல்படுத்துதல் அவசியம். பக்தர்கள் நம்பிக்கையை விட அவர்களின் காலம் தாண்டி வாழும் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாப்பதில் உள்ள அவசியம் பற்றி இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் முறைமைகள் தேவை…

கோவிலுக்கு ஏற்றார் போல,மக்கள்  கூட்டத்தை கட்டுப்படுத்தி, கூட்டம் கூடும் வாப்புகளை குறைத்து இக்கோவில்கள் எல்லாம் நம் காலத்தில் பாதுகாக்க பட வேண்டியவை என தோலில் உள் செல்லுமாறு செய்தி, விளம்பரம் செய்தல் வேண்டும்

இப்படி சில முறைகளை, யோசனைகளை கட்டுரை வடிவில் விண்ணப்பம் போல அரசுக்கு கொண்டு செல்வதில் மனத் தடை எதும் இருக்காது என நினைக்கிறேன். பண்பாட்டு ஆர்வலர்கள் ஒரு கூட்டுமனுபோல அரசுக்கு அளிக்கலாம்

வெறுமனே சீரழிவின் மேலும், மக்கள் கூட்டம் மேல் குமட்டலும், சாபம் விடுதலும் விடுத்து செயல் திட்டம் ஒன்றை முறையாக  இந்த அரசிற்கு எடுத்து சொல்லி பார்ப்போமே  …

அன்புடன்,

லிங்கராஜ்

 

அன்புள்ள ஜெ

ஆலயங்களைப் பராமரிப்பது பற்றிய ஒரு செயல்திட்டம் அல்லது முன்வரைவு ஒன்றை இந்த அரசு உருவாக்கும் என்றால் அது மிகச்சிறப்பான ஒரு நடைமுறையாக இருக்கும். பக்தியின் பெயராலோ திருப்பணியின் பெயராலோ அல்லது வேறு எதன் பெயராலோ ஆலயங்களில் என்னென்ன செய்யலாம் செய்யக்கூடாது என்று நிபுணர்களைக்கொண்டு ஒரு கமிட்டி அமைத்து வரைவு தயாரித்து அரசாணையாக வெளிவரவேண்டும். சட்டமன்றத்திலும் முன்வைக்கலாம். இந்த அரசு பலதுறைகளில் முன்னோடியான சிறப்புத்திட்டங்களை முன்வைத்து வருகிறது. இதிலும் அதை கடைப்பிடிக்குமென்றால் இந்துக்களின் வாழ்த்து இந்த அரசுக்கு இருக்கும்

எக்காரணம் கொண்டும் சிற்பங்கள்மேல் மணல்வீச்சு முறைபோன்றவற்றை கையாளக்கூடாது. தனியார் திருப்பணி செய்வதானாலும்கூட சிற்பிகள் பொறியாளர் ஆகமவல்லுநர் போன்றவர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக்குழுவின் கட்டுப்பாடு இருந்தாகவேண்டும். திருவிழாக்கள் போன்றவற்றுக்காக கோயிலில் பந்தல்கட்டுதல் போன்றவற்றால் கோயிலின் கட்டமைப்பும் சிற்பமும் அழியக்கூடாது. கோயிலுக்குள் கழிப்பறைகள் போன்றவற்றை கட்டக்கூடாது. கோயிலை ஒட்டி எந்த கட்டுமானமும் அமையக்கூடாது. இவையெல்லாம் உடனடியாகச் செய்யபப்டவேண்டியவை.

 

மகேந்திரன் எம்

முந்தைய கட்டுரைமத்துறு தயிர்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகல்குருத்தும் கருப்பட்டியும்