அருள்- கடிதங்கள்

பொலிவதும் கலைவதும்

பொலிவதும் கலைவதும் வாங்க

2020 வருடம் ஜுன் 19இல் வந்த “அருளை” மறுவாசிப்பு செய்தேன். மறுவாசிப்பு fine tuning மட்டுமல்ல ஒரு nostslgiaவும் கூட.  “சென்று சென்று இழந்த அனைத்தையும் அடைந்துவிடலாம் …..” கதையில் ஒரிடத்தில் வரும்  இவ்வரிகள் மறுவாசிப்புக்கும் பொருந்திபோகிறது.

“எல்லாமே பாக்க ஆரம்பிச்சா அழகா ஃபன்னியா ஆயிடுது இல்ல?”.  இதுதான் கதையின் அடிநாதம். சாதனா முதன்முறை குகைக்குள் சென்ற பயந்தாள். பார்க்கவில்லை.  இரண்டாம் முறை ஒரு மணி நேரம் தனித்திருந்த பொழுது பார்த்தாள்.  அருளப்பட்டாள். பயந்த பொழுது பயணம் நேரம் பத்து வருடகாலமாய் நீண்டது. “அருள”ப்பட்டபின் திரும்புதலில் பொழுது பத்து வயது மீட்கப்பட்டது.  காரின் சீட்டை நிமிர்த்தி பயணிக்க முடிந்தது. வாணவில்லை ரசிக்கமுடிந்தது. கணவனிடம் கனியமுடிந்தது.

இந்த தருணம் மறுமுறை வருமா? சாதனா பதில் சொல்கிறாள் : “இன்னொரு வாட்டியா? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை”.  பிறப்பும் இறப்பும் பயத்தலும் பயவிலகலும் ஒருமுறை தானே.

 

icf சந்துரு

பிரஸ்காலனி கோவை – 19

 

அன்புள்ள ஜெ

அருள் கதை போல ஒன்று என் மனைவியின் வாழ்க்கையிலும் நடந்தது. அவளுக்கு கான்ஸர். அந்த நோயில் நோயைவிட சிகிச்சை கடினமானது. அவளுக்கு சிகிச்சை செய்தே என் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் நாளுக்குநாள் நம்பிக்கை இழந்து மனம் உடைந்துகொண்டிருந்தாள். எந்நேரமும் எரிச்சல், கோபம். அவளுக்குத் தெரியும், நாங்கள் எவ்வளவு சிறப்பாக பார்த்துக்கொண்டோம் என்று. இருந்தாலும் தெரிந்தே அவள் எங்களை சித்திரவதை செய்தாள். அவளை நாங்கள் சாகக்கொடுக்கிறோம் என்று சொன்னாள்.

ஒரு நாள் காரில் செல்லும்போது விபத்து. நேர் எதிரில். எங்கள் கார் தப்பித்தது. வேறொரு காரின்மேல் பைக் மோதிவிட்டது. இரண்டு பையன்கள் மண்டை உடைந்து கிடந்தார்கள். கொடூரமான காட்சி. ஆனால் அவள் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே வந்துவிட்டோம். அதன்பிறகு வேறுமாதிரி ஆகிவிட்டாள். பேச்சு சிரிப்பு எல்லாம் வந்துவிட்டது. ஏழுமாதமாகல் அதன்பிறகு உயிருடன் இருந்தாள். மகிழ்ச்சியாகவே இருந்தாள். நிம்மதியாக போய்சேர்ந்தாள்.

அவளுக்குக் கிடைத்ததும் அருள் கதையின் வரும் கதைநாயகி அடைந்த அதே தரிசனம்தான் என்று நினைக்கிறேன்

ராகவேந்திரன்

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் “ஆனையில்லா”
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
உடையாள் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள்
பத்துலட்சம் காலடிகள் ஞானி குகை
சாதி – ஓர் உரையாடல் வணிக இலக்கியம் வாசிப்பின் வழிகள்
இலக்கியத்தின் நுழைவாயிலில் ஒருபாலுறவு இன்றைய காந்தி
சங்கச்சித்திரங்கள் ஈராறுகால் கொண்டெழும் புரவி நத்தையின் பாதை

 

முந்தைய கட்டுரைமுதலிதழ்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்குருத்து, கடிதங்கள்-2