அஜ்மீர் கடிதங்கள்-5

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

அஜ்மீர் தர்கா முன்பாக தலைக்குல்லா அணிந்து நீங்கள் நிற்கிற ஒளிப்படத்தைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் ஒருவித உளயெழுச்சி தோன்றுகிறது. என்னுடைய தாத்தா தீவிரமான சிவபக்தராக இருப்பதை சிறுவயதிலிருந்தே வீட்டில் கண்டு வளர்ந்திருக்கிறேன். அதிகாலைப்  பொழுதில் தேவாரம், திருவாசகம் பாடி தெய்வங்களைத் துதித்தபிறகே தன்னுடைய அன்றாடத்தை அவர் துவக்குவார். அப்பொழுது என் அம்மா, நாகூர் ஹனிஃபா பாடிய ‘இறைவனிடம் கையேந்துங்கள். அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடலை இறுதியாக ஒலிக்கச்செய்வார். தேவார, திருவாசக துதிகளின் நீட்சி எல்லாம்வல்ல ஏகயிறையைத் தொழுதுவணங்கும் அந்த இசைப்பாடலோடு நிறைவுகொள்ளும். ஏதோவொருவகையில் இசுலாத்தின் பச்சைநிறம் இறைக்கருணையின் குறியீடாகவே என் மனதில் பதிந்திருக்கிறது.

தர்கா வாசலில் நீங்கள் நிற்கிற ஒளிப்படம் ஏதோவொரு உதிர்ப்பின் நற்கணத்தை மனதுக்கு நிறைவுறுத்துகிறது. வெண்முரசு என்னும் பேரெழுகையின் நிழல்கூட படியாத இடத்திற்கு நீங்கள் விலகநிற்க விரும்புவதன் ஆன்மீகமான உள்ளர்த்தத்தை மீளமீள யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பாலையில் உதித்தப் பெருநிலவைக் கண்டு, ஆசான் வைக்கம் முகமது பஷீர் அழுதுகூசிய அதியுன்னத மனோபாவத்தை இக்கணம் நினைத்துக்கொள்கிறேன்.

ஈரோடு டாக்டர் ஜீவா அவர்களின் நினைவாகத் துவங்கப்பட்ட அறக்கட்டளை வாயிலாக, ஒரு முக்கியமான செயற்பணியைத் தொடங்குவதற்கான நல்லதிர்வையும் நம்பிக்கையையும் இந்த ஒளிப்படத்திலிருந்து நான் கண்டடைந்துகொள்கிறேன். எத்தனையோ வசைகள், ஐயப்பாடுகள், திரிபுகள் என அனைத்துக்குமான பதிலாக இந்த ஒளிப்படம் ஓர் மெளனத்தை அளிக்கிறது. வெண்குவைமாடத்துப் பெருவாசலின் கீழ் வெண்முரசின் நினைவுகரைவது, ஊழ்கத்தின் இறையாசி என்றே திரும்பத் திரும்ப மனதிற்குள் தோன்றுகிறது.

நன்றியுடன்,

சிவராஜ்

அன்புள்ள ஜெ

அஜ்மீர் பயணக்கட்டுரைகளை மிகுந்த மனஎழுச்சியுடன் வாசித்தேன். அதை வாசிக்கும்போதுதான் எனக்கே எந்த அளவுக்கு உள்ளூர இறுக்கங்கள் இருந்திருக்கின்றன என்று தெரிந்தது.நான் இதுவரை தர்காக்களுக்குச் சென்றதில்லை. சூபி இசை கேட்டதுமில்லை. ஒட்டுமொத்தமாக ஒரு பண்பாடே அறிமுகமானதுபோல் இருக்கிறது. ஆன்மிகம் என்றால் நம்மை நாமே முடிச்சுகளை அவிழ்த்து விடுதலை செய்துகொள்வதுதான் என்று சத்குரு சொல்வதுண்டு. அந்த அனுபவம் இக்கட்டுரைகளில் இருந்து கிடைத்தது. நன்றி

ஜெயப்பிரகாஷ்

க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!

குவாஜா ஜி மகாராஜா!

அஜ்மீர் ஜானே!

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-4

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்

அஜ்மீர் பயணம்- 7

அஜ்மீர் பயணம்-6

அஜ்மீர் பயணம்- 5

அஜ்மீர் பயணம்- 4

அஜ்மீர் பயணம்-3

அஜ்மீர் பயணம்-2

அஜ்மீர் பயணம்-1

அஜ்மீர்,பிருத்விராஜ்- கடிதம்

அஜ்மீர் கடிதங்கள்-4

அஜ்மீர்- கடிதங்கள்-2

அஜ்மீர் – கடிதங்கள்-1

சிஷ்டி கவிதைகள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைசடம் கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைதிருவள்ளுவர் திருநாள் எது?- பா இந்துவன்.