அறம் ஒரு கடிதம்

 

அறம் விக்கி

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

இன்று தங்கள் வாசகன் ஆன பா. மீனாட்சிசுந்தரம் எழுதும் மடல்.

சமீபத்தில் திருமதி. பாரதி பாஸ்கர் கூறிய சொற்பொழிவு ஒன்றைக் கேட்டேன். அதில் அவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் அறம் பற்றிய ஒரு சொற்பொழிவில் கூறியது என் மனதில். ஆழமாக பதிய அதைப் பற்றி திருச்சியில் உறையும் என் நண்பர் திரு. S. மணிவண்ணன் அவர்களிடம் கூற அவர் தங்கள் புத்தகத்தை பரிசாக அனுப்பி வைத்தார்.

அன்புடையீர், எனக்கு இந்த அறம் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும். உங்கள் முதல் கதையை படித்தவுடன் எனக்கு திருவள்ளுவர் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

“அல்லர்ப்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரற்றே,

செல்வத்தை தேய்க்கும் படை”,

என்ற குறள் இதைத் தான் கூறுகிறது என்று நம்புகிறேன்.

எனது தந்தையாரின் தாய் வழி முப்பாட்டானர் அறம் பாடி விடுவார் என்றும், ஒரு முறை எங்கள் குல தெய்வம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள தைலாகுளம் ஶ்ரீ வீரமாகாளியம்மன் தான் எங்கள் குலதெய்வம். அந்த தெய்வத்தையே கோபம் கொண்டு பாடியதால் சேத்தூர் ஜமீன்தார் வந்ததாக  வரலாறு உண்டு.

மிக்க அற்புதமான புதினம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,

பா. மீனாட்சிசுந்தரம்,

***

அன்புள்ள மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு

எனக்கும் அக்குறள் பிடித்தமானதே. நான் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் முகப்புவாசகமாக அமைந்துள்ளதும் அந்தக்குறள்தான்.

அறம் என்பது தமிழ்ப்பண்பாட்டின் மகத்தான கொள்கைகளில் ஒன்று. அரசியல்பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகும் என்னும் சிலம்பின் வரியும் இதனுடன் இணைந்துகொள்ளக்கூடியது

ஜெ

அறம் கடிதங்கள்

அறம்- கடிதங்கள்

அறம்- கடிதங்கள்

அறம்- கடிதங்கள்

அறம் -கடிதங்கள்

அறம் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைகாலம்!
அடுத்த கட்டுரைகேளாச்சங்கீதம், கடிதங்கள் 11