காந்தி,ஞானம் – கடிதங்கள்

உரையாடும் காந்தி வாங்க

இன்றைய காந்தி வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் உரையாடும் காந்தியை படிக்கும் போது, காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தையும் சேர்த்தே படித்து வருகிறேன். காந்தியை முழுதாக தொகுத்துக் கொள்ள இது உதவுகிறது.கணிதத்தில் ஒரு சூத்திரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்று புரிந்து கொள்ளும் போது வரும் ஒரு புரிதல் நிலை கொடுக்கும் மகிழ்ச்சி போல் உள்ளது. அதே போல் தங்களின் இந்திய ஞானம் புத்தகத்தை படிக்கும் போது கூடவே , குர் அதுல்  ஐன் ஹைதர் அவர்களின் அக்னி நதி நாவலையும் படித்தேன். இலக்கியம் என்பது வெறும் புனைவு fantasy இல்லை, நம் மரபை நாம் புரிந்து கொள்ள உதவும் ஒரு கருவியாகவே தோன்றுகிறது.

இந்திய ஞானத்தில் தாங்கள் எழுதிய கட்டுரைகளில் வருபவை எல்லாம் அக்னி நதியில் கெளதம் நீலாம்பரனின் விவாதத்தில் வருகிறது. என்னை அறியாமல் நான் துள்ளித் குதித்தேன், என் புத்தக வாசிப்பை எண்ணி, இந்திய ஞானத்தை தங்களின் வெண்முரசில் எல்லா இடங்களிலும் சொல்லிச் செல்வீர்கள். அதில் படிக்கும் போது ஒன்றிரண்டு புரியாதது , தங்களின் இந்திய ஞானம் கட்டுரைகள் படித்த போது தெளிவாகிறது. அக்னி நதியில் அதைக் காணும் போது மொத்தமான ஒரு உருவாக புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி புத்தகங்களை தேர்வு செய்து ஒன்றோடொன்று சேர்த்து வாசிக்கும் போது வரும் இன்பம் அளப்பரியது. அனைத்திற்கும் மிக்க நன்றி……..

பெருட்செவி:

1.உரையாடும் காந்தி:

 

 

2.சத்திய சோதனை

 

3.அக்னி நதி

4.இந்திய ஞானம்

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று வீட்டில் நடந்த சுவையான சம்பவம். உங்களிடம் சொல்லியேயாக வேண்டும். என் அறையில் புத்தகங்களை என் வசதிக்கு தகுந்தபடி அடுக்கி வைத்திருப்பேன். அது அம்மாவுக்கு எப்பவும் அலங்கோலம்தான். இன்று அறையை சுத்தப்படுத்திவிட்டு புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்  நாவலை எடுத்தபின் ஐனு மகிழ்ச்சியாகி விட்டார்கள். காந்தி ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டார்கள்.

உங்களின் இன்றைய காந்தி நாவலை எடுத்து தலைப்பை படித்தபின் அட்டையைப் பார்த்து இது அஞ்சாறு காந்தியென சொல்லிவிட்டார்கள். அவருக்கு காந்தியென்றால் கனிந்த காந்திதான். இவர்தான் இளையவயது காந்தியென எப்படி சொல்லிப் புரியவைப்பேன்? காந்தியின் சத்தியசோதனை நாவலை பார்த்தபின்பும் மீண்டும் அதே மகிழ்ச்சி. காந்தி எனக்கு மட்டுமல்ல என் அம்மாவுக்கும் இந்தளவு பிடிப்பது எனக்கு தற்செயலாய் கிடைத்த மகிழ்ச்சி. காந்தியென அவர் மனதிலிருப்பது கனிந்த காந்தி. இளமை காந்தியை விடவும் கனிந்த காந்தியே வசீகரமாகவும் இருக்குகிறார். கனிந்த காந்தியில் அவரின் ஆன்மபலம் வெளிப்படுகிறதா?

அன்புடன்,

மோகன் நடராஜ்

முந்தைய கட்டுரைகுமரி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறிவுரைகளா?