மதுபாலா:கடிதங்கள்

வணக்கம் குரு.,
 மதுபாலா பற்றிய கட்டுரை வாசித்தவுடன் என்னமோ செய்கிறது வார்த்தை வரவில்லை., அழுதுவிடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கிறது(அழுதால் கோழைதனம் தானே?)
ஏழாம் உலகம் வாசிக்கையில் உருப்படிகள் எல்லாம் ஒரு கதை பாத்திரமாக வந்து போன நினைவு தான் மிஞ்சுகிறது ஆனால் நீங்கள் போட்டோவையே காண்பித்த பிறகு ஒன்றுமே செய்ய முடியவில்லை., அவள் வகிடு எடுத்து தலை சீவியிருக்கும் அழகு,அவள் முகத்தில் தெரியும் சாந்தம், எப்படி அன்பின் ஆழம் மட்டும் குறையாமல் ஒரு குறைபிறவி,இல்லை இதுதான் பரிபூரன அன்பா?
அவளுக்கு எந்த வகையில் உதவலாம் என்று தயவு செய்து கூறவும்.பணம் அனுப்பிவிட்டால் பயன் பெறுவாளா?
அப்படி இருப்பின் முகவரி தெரியபடுத்தவும்.
மகிழவன்.
88

அன்புள்ள மகிழவன்

மதுபாலாவை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. நான் விசாரித்துச்  சொல்கிறேன்.

பொதுவாக இவர்களை ஏதாவது தொண்டு நிறுவனங்கள் மூலமே அணுக முடியும். தொண்டு நிறுவனங்களை அணுகவேண்டியவர்கள் அணுகட்டும் என முதலிலேயே நம்பகமான நிறுவனங்களை தலைப்பில் சொல்லியிருக்கிறார் பாலா
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
உங்கள் கடிதத்திற்கு நன்றி. அது எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று சொல்லும்படியாக  ஒரு கட்டுரை படித்தேன். நான் பார்த்த வரையில் உங்கள் அனைத்து புகைப்படங்களும் (வட இந்திய சுற்றுலவைய்யும் சேர்த்து ) ஒரு சம்பிரதாயதன்மை கொண்டதாகவே உள்ளது. ஆனால்  இதில் உள்ள உங்கள் புகைப்படங்கள் தான் ஒரு நெகிழ்வை தந்தது.
அந்த புகைபடங்களை எடுத்தவர் உங்கள்   பழகமானவராக  இருந்தால் என் சார்பில் அவருக்கு  ஒரு நன்றி நீங்கள் சொன்னால் நான் மகிழ்வேஅன் . இந்த கட்டுரையில் எழுத்தும் புகைப்படங்களும் ஒரு ஆழ்நதியை தேடி யில் குறிப்பிடும் “பெரும் கனிவு” ,”உன்னதம்” இரண்டையும் எனக்கு சமிபத்தில் கொடுத்த கட்டுரையாக இது உள்ளது. படித்தீர்களா,பார்த்தீர்களா அதை ?


Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
அந்தப் படங்களைஎ டுத்த்வர் என் நண்பரும் நான் கடவுளில் ஸ்டில் புகைபப்ட நிபுணரும் பாலா அளவுக்கே எடை கொண்டவருமான பாபு.
நன்றி சொல்லிவிடுகிறேன்
ஜெ

ஜெ
அன்புள்ள ஜெ
மதுபாலா கட்டுரை மனம் நெகிழச்செய்துவிட்டது. மனித ஆத்மா என்றால் என்ன என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மூளை என்று நாம் சொல்லும் அந்த உறுப்பு இல்லாவிட்டாலுகூட மனித ஆத்மாவின் சாராம்சம் இருந்துகொண்டுதான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். அந்த 17 வயதுக் கைக்குழந்தையின் அன்பு ஒரு பழக்கம்– வாழ்வதற்கான உயிரின் உத்தி– மந்தை பண்பாட்டின் எச்சம் என்றெல்லாம் தர்க்கம்செய்யலாம்தான். ஆனால் அதெல்லாம் ஒரு பக்கம்தான் . மனிதனுக்கு ஆழத்தில் அன்புசெலுத்தும் பண்பு இருந்துகொண்டே இருக்கிறது என்பதற்கான ஆதாரம் அது.
ஏழாம் உலகம் நாவலின் இறுதியில் திரண்டுவருவதும் இதுதான். மனிதன் எங்கும் ஆனந்தமாக இருப்பான். எப்படியும் வாழ்க்கையைக் கொண்டாடுவான். எங்கும் எப்போதும் மனிதனாகவே இருப்பான். அன்பும் தியாகமும் அவனிடம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதையெ எஇந்த சிறிய கட்டுரையிலும் காண்கிறேன்.
நான் கடவுள் ஒரு வணிகப்படம். அந்தப் படத்தின் அமைப்புக்குள் இந்த மானுட அம்சம் இருப்பதை ஒரு மிக முக்கியமான சமகால நிகழ்ச்சியாகவே நான் எண்ணுகிறேன். அதில் பிச்சைக்காரர்கள் சிரிப்பதைக் கண்டு எரிச்சல் கொண்டு பலர் எழுதியிருந்தார்கள். இணையத்தில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது. வருத்தமாகவும். நாம் பிச்சைபோடுபவன் அழவேண்டும், நாம் அவனை நோக்கி பரிதாபப்படவேண்டும் என்று எண்ணுகிறார்கள் . படித்தவர்கள் கூட. படத்தில் அந்தப்பையன் நம்மைப்பார்த்துச் சிரிக்கிறான். மதுபாலா நம்மை பார்த்து சிரிக்கிறார்/ அந்தச்சிரிப்பு மிகவும் உறுத்தலைக் கொடுக்கிறது. மனசாட்சியை கசக்குகிறது.
இப்போதைக்கு படத்தில் என் நினைவில் நிற்பது, படத்தின் மையமாக இருப்பது, இந்த சிரிப்புதான். ‘போடாங்’ என்று அவர்கள் நம்மை நோக்கி சிரிக்கிறார்கள். ஏழாம் உலகத்தின் சாராம்சமான விஷயம் படத்தில் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். மற்றபடி எதிர்பார்ப்புகள் சார்ந்து சொல்லும் அபிப்பிராயங்கள் , அறிவுஜீவி அலசல்கள் எல்லாம் பத்துநாளில் காலாவதியாகிவிடும். அந்த சிரிப்பு மட்டும் நிற்கும்
சுவாமிநாதன்

[மொழியாக்கம்]
88

ஜெயமோகன் அவர்களுக்கு,
 

 

 

                        வாழ்வை நோக்கிய நோக்கு நோக்கில் உள்ளது.அது ஏழாம் உலகிலும் சாத்தியமே. மூன்று வருடங்கள் முன் ஏழாம் உலகம் பற்றி நீங்கள் எழுதிய கடிதத்தில் சொல்லியிருந்திர்கள். நான் சிறுவயதிலிருந்து என் பெரியம்மாவை பார்த்து வருகிறேன்.  அவருக்கு வீடே உலகம். சமகால அரசியல் எதுவும் அவருக்கு தெரியாது. காலையில் ஐந்து மனிக்கு எழுந்து கொள்வார்.இரவு பத்து மனிக்கு உறங்கச் செல்வார். இடைப்பட்ட நேரத்தில் முழுக்க வீட்டு வேலை. இப்படியாக நாற்பது வருடங்கள் வாழ்ந்து வருகிறார். இது தான் என் வாழ்க்கை,என் உலகம் என்பதாக வாழ்கிறார். என் வாழ்வின் அதிசயங்களில் அவரும் ஒருவர்.
நான் பார்க்கும் கர்ம ஞானி அவர். 
எனக்குள் நடக்கும் உரையாடல்களையே உங்களிடம் கேள்வியாக கேட்டேன்.  வேறு நோக்கம் ஏதுமில்லை. சில மாதங்களுக்கு முன் ஸ்டேர்லிங் ரோட்டில் சென்றபோது அடர்த்தியான மரங்களின் ஊடாக ஒளிக்கற்றைகளை பார்த்தேன்.  எனக்கான பிரபஞ்ச தரிசணம்.
நீன்ட நாட்களுக்கு அந்த மன எழச்சியிருந்தது. அதை வைத்து ஒரு கதைகூட எழுதினேன்.  பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.ஆனால் அது நல்ல படைப்பாகயிருந்தால் அது வாசிக்கப்படும் என்பதால் விட்டுவிடுகிறேன்.
 
 —
 
நாஞ்சில் நாடன் ஒருமுறை ஏதோ பேட்டியில் ‘நான் மூப்பது வருடங்களாக எழுதுகிறேன்.ஆனால் தலை கீழ் விகிதங்கள் திரைப்படம் ஆக்கப்பட்டதை வைத்து மட்டும் என்னை அடையாளப்படுத்துவது சரியில்லை’ என்பது போல சொல்லியிருந்தார்.
 
அதனால் எழுத்தாளர்களிடம் அவர்கள் பணிபுரியும் திரைப்படம் சார்ந்து பேசுவதில் எனக்கு தயக்கமுண்டு. இருந்தும் சில வரிகள்.
 
ஒரு குழந்தையிடம் நாம் பேச வேண்டியதில்லை.கொஞ்ச வேண்டியதில்லை. தூய அன்பு இருந்தால் அந்த குழந்தை நம்மிடம் தானாகவே வரும்.நான் பார்த்திருக்கிறேன்.  ஏதேதோ வகையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்டவர்களும் அப்படிப்பட்ட குழந்தைகளே.
தூய அன்பு இல்லாமல் அவர்களை மனதளவில் நெருங்க முடியும் என்று தோன்றவில்லை. பாசாங்கை அவர்கள் எளிதில் கண்டரிந்து விடுகிறார்கள்.
 
பாலாவால் இத்தகைய ஆத்மாக்களை நடிக்க வைக்க முடிந்திருக்கிறது.
தூய அன்பும் ,அறக் கோபமும் , ஆன்மபலம் உள்ளவரால் மட்டுமே சாத்தியபடக்கூடியது இது. அவருக்கு என் வாழ்த்துகள்.

 
 
நன்றி,
ச.சர்வோத்தமன்.
 

 

 

 http://www.youtube.com/watch?v=gfgZAXvLG3s

மதுபாலா

 

முந்தைய கட்டுரைவற்கீஸின் அம்மா:கடிதம்
அடுத்த கட்டுரைவழி:கடிதங்கள்