அரசமரத்தின் நிமிர்வு

’நினைவு என்பதும் எண்ணம் என்பதும் கோடிக்கணக்கான இணைவுகளின் தொகுதி, மூளை என்பது அவ்விணைவுகளை உருவாக்கும் உயிர்மின்சார சுழல்தொடுப்புகளின் தொகுதி’. பல ஆண்டுகளுக்குமுன் ஆலிவர் சாக்ஸின் ஒரு நூலில் வாசித்த வரி. புனைவு என்பது ஒருவகை நினைவுகூர்தல். ஆனால் நினைவுகூர்தலுக்கும் புனைவுக்குமான முதன்மையான வேறுபாடு என்பது எதை எதனுடன் இணைத்துக்கொள்கிறோம் என்பதிலுள்ள ஒரு தன்னிச்சையான இயங்குமுறை. இணைவுகள் வழியாக உருவாகும் புத்தம்புதிய பொருள்கோடலின் வெளி. அருண்மொழியின் இக்கட்டுரை ஒரு நல்ல புனைவும்கூட. மிக இயல்பாக அமைந்திருக்கும் அந்த இணைவால். அது உருவாக்கும் கேள்வியால்.

ஊர் நடுவே ஓர் அரசமரம்

முந்தைய கட்டுரைநன்கொடை அளிப்பது பற்றி…
அடுத்த கட்டுரைபிரான்ஸிஸ் கிருபா, சில எதிர்வினைகள்