அன்பு ஜெ
எல்லோரும் சொல்வது போலவே குமரித்துறைவி was a true bliss. திருமணம் என்னும் மங்கள நிகழ்வை கடவுளுக்கே செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்னும் கதைக்கறு கேட்கும் போதே மனதுக்குள் ஒரு பிரம்மாண்டம் எழுந்து அடங்குகிறது. அதனுடன் வரலாறு சேரும் போது சொல்ல முடியாத உணர்வெழுச்சி . நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு முந்தைய நாள் படிக்க நேர்ந்தது. video streamingல் பார்த்தாலும் அத்திருமனத்தில் என்னை ஒரு தந்தையாகவே பாவித்து கொண்டேன். வீடியோவில் ஒரு இடத்தில் தோழி தன் தந்தையை பார்த்து அழவேண்டாம் என பார்வையில் சொல்வதை பார்த்து நானும் அழுதேன். நிகழ்வு முழுக்க எனக்கு அவள் மகளாகவே தெரிந்தாள்.
என் இரு வயது மகள் நாளை திருமணம் செய்யும் தருணம் பலமுறை வந்து சென்றது. கதையை என் மனைவியிடமும் அண்ணியுடமும் சொன்னபோது அவர்களுக்கும் அழுகை. படித்த கதையை இனொருவரிடம் சொல்லும் போதே அழுகை வருகிறதென்றால் கதை எப்பேற்பட்டது என்று புரிகிறது . இப்புத்தகத்தை விவரிக்க சொற்கள் இல்லை கண்ணீர் மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே பலர் இந்த கண்ணீர் பற்றி பேசி இருப்பதால் எதையும் வெளியிட வில்லை என்று எழுதி இருந்தீர்கள். படித்த அனைவரது உணர்வையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது . இந்த உணர்வு பெருக்கை வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை என்று நினைக்கிறேன்.
இப்புத்தகம் Kindle கிடைக்கிறது புத்தகமாக வெளியுட எதுவும் திட்டம் இருக்கிறதா. அம்மா விற்கு படிக்க கொடுக்க வேண்டும். கணினி பார்த்து படிக்கும் அளவிற்க்கு அவர்கள் கண் இன்னும் பழகவில்லை. புத்தகமாக வந்தால் நிறையா பேருக்கு பரிசாக அளிக்க வேண்டும். புத்தகம் வாங்க ஏதும் வழி இருந்தால் சொல்லவும் .
நன்றி
முத்து
***
அன்புள்ள முத்து,
விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் அச்சுநூலாக குமரித்துறைவி இன்னும் சில நாட்களில் வெளியாகும். எல்லா நூல்களுமே அச்சில் வெளிவரும். இந்த கொரோனா சூழல் காரணமாக கொஞ்சம் தாமதமாகிறது
ஜெ