நூல்கள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ..
இதுவரை இரண்டு கட்டுரைகள்(தமிழ் படைப்பு இலக்கிய மரபின் ஆன்மிக சாரம் என்ன மற்றும் இலக்கியமும் கடவுளும் ) வரை தான் படித்து உள்ளேன்..ரொம்ப ரொம்ப நுட்பமான விஷயங்களை எடுத்துக்கொண்டு  துல்லியமான வரையறைகளை வழக்கமான உங்கள் அனுபவம் சார்ந்த உதாரணங்களுடன் எழுதி இருகிறீர்கள். மிக அருமை மற்றும் என்னை போன்ற ஆரம்ப நிலை வாசகனும் புரிந்து கொள்ளும்படி எளிமையான விளக்கமாகவும் உள்ளது.   இலக்கியமும் கடவுளும் கட்டுரையில், “முரண் இயக்க பொருள்முதவாதம் உருவாகி அது இந்தியாவில் பிரபலம் அடைந்து விட்டது என்றும் அதை ஈ. வே.ரா மற்றும் அவரது மாணவர்கள் கற்கவோ கவனிகவோ முயலவில்லை   என்றும் எழுதி இருகிறீர்கள்”.இதில் “முரண் இயக்க பொருள்முதவாதம் ”  என்ற தனித்த சொல்லை பயன்படுத்தி இருகிறீர்கள் அதன் அர்த்தத்தை (கொஞ்சம்) விளக்க முடியுமா ? கொஞ்சம் குறுக்கீடு தான் மன்னிக்கவும் எனக்கு நான் அனுபவித்த , மற்றும் உண்மையில சிலிர்த்த   இலக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள நீங்கள் ஒருவர்தான் (மதிப்பான நண்பராக ) உள்ளீர்கள்.என் சக  நண்பர்கள் இந்த விஷயத்தில்  துரதிஷ்டமானவர்களே.

என் வரையில் நாவலுக்கு ஏழாம் உலகம் எவ்வளவு பொருத்தமான மற்றும் துல்லியமான தலைப்போ அது போல் இந்த கட்டுரை தொகுப்புகளுக்கு “ஆழ் நதியை தேடி” : முதல் இரண்டு கட்டுரைகளை படித்த உடனே  சொல்ல முடிகிறது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Regards
dineshnallasivam

 

 

 

 

 

 

அன்புள்ள தினேஷ் நல்லசிவம்

முரணியக்கம் என்றால் இரு கருத்துக்கள் அல்லது இரு ஆற்றல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த முரண்பாடு வழியாக ஒரு முன்னோக்கிய நகர்வு உருவாவது. பெரும்பாலான சமூக இயக்கங்களை முரணியக்கம் மூலம்தான் நாம் புரிந்துகொள்கிறோம். உதாரணமாக தேவைX உற்பத்தி இரண்டுக்கும் இடையேயான முரணியக்கமே விலை. இதை தேவை x  உற்பத்தி= விலை என்று சொல்லலாம். தத்துவத்தில் இரு கருத்துக்கள் மோதி முயங்கி மூன்றாம் கருத்து பிறப்பதை இது சொல்கிறது

வரலாறு என்பது அதில் செயல்படும் பொருளியல் சக்திகளில்  முரணியக்கம் மூலம் முன்னோக்கி நகர்கிறது என்பதே மார்க்ஸ் முன்வைத்த ததுவ கோட்பாடு. இதுவே மார்க்ஸியத்தின் சாரம். இதை அவர் வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதம் என்று சொன்னார். இதன்படி உழைக்கும் வற்கம்X சுரண்டும் வற்கம், ஆள்பவர்X ஆளப்படுபவர் என்னும் இருபாற்பட்ட சக்திகளின் மோதல் மூலமே சமூகம் முன்னகர்கிறது. வரலாறு நிகழ்கிறது

 

***

 

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் உங்கள் காடு நாவலை படித்தேன். நெடுங்காலமாக நணபர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் இதுவரை மதுரைக்கு கீழே வந்ததில்லை. சென்னையில் பிறந்து மைசூரில் வளர்ந்து மாண்டியாவில் வேலைபார்க்கிறேன். ஆனால் அந்த மொழி எனக்கு கொஞ்சம்கூட சிக்கலாக இருக்கவில்லை. சொல்லப்போனால் அந்தமொழி என்னை மிகவும் கவர்ந்து உள்ளே கொண்டுபோயிற்று. குட்டப்பனை நேரில்கண்டு பேசிக்கொண்டிருந்த உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. மிக வலிமையான நாவல். இந்த அளவுக்கு நுட்பமான நகைச்சுவை நான் எந்த நாவலிலும் வாசித்ததில்லை. கிண்டல்களுக்கு ஒரு ஆழமான தத்துவ அர்த்தம் இருக்கிறது.டுதாரணமாக யானைதான் காட்டுக்கு ராஜா, சிங்கத்தின் பிடரி வெள்ளைக்காரன் முடி போல இருப்பதனால் வெள்ளைக்காரன் அதை ராஜா என்று சொல்லிவிட்டான். காட்டுக்கு ராஜா கறுப்பாகத்தானே இருக்க வேண்டும் என்ற குட்டப்பனின் வரி. எத்தனை ஆழமான கருத்து. நாள்முழுக்க யோசித்துக்கொண்டே இருந்தேன்

உரையாடல்களில் உருவாகும் தீவிரத்தை எத்தனை தூரம் சொன்னாலும் தீராது. ‘வேசித்தொழிலுக்கு போகலாம் என்றாலும் முடியாதே’ என்று அழமில்லா மனைவி உதவாக்கரை கணவனிடம் சொல்லும் இடம். அந்த மனிதனின் மரணம் அங்கேதான் நடந்திருக்கும் என்று தோன்றியது. கிரிதரனின் ஆன்மீக வீழ்ச்சியின் சித்தரிப்பு மிக அற்புதமாக இருந்தது. அந்த வீழ்ச்சியை அவன் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து அதில் திளைக்க ஆரம்பிப்பது, நாகராஜன் கோயிலில் நடக்கும் விஷயங்கள், அதையெல்லாம் வாழ்க்கையை கண்டு கடந்துசென்ற ஒருவனாலேயே எழுத முடியும்.

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

குருநாதன்

[மொழியாக்கம்]

அன்புள்ள ஜெ,

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலை பலமுறை வாசித்தேன். என் மேஜையிலேயே வைத்திருக்கிரேன். புத்தகப்பட்டியல் கலைச்சொற்கள் விரிவான அறிமுகங்கள் எல்லாம் கொண்ட இத்தனை விளக்கமான கையேடு மிக அபூர்வமாகவே தமிழுக்கு கிடைக்கிறது. என்  எல்லா கேள்விகளுக்கு பதில் உள்ல நூல் என்று அதைப்பற்றி எண்ணிக்கொண்டேன்

பழந்தமிழ் இலக்கியம், இந்திய சிந்தனை ஆகிய இரண்டுக்கும் நீங்கள் இதைப்போல ஒரு நல்ல கையேடு போடவேண்டும்

ஆறுமுகம்

ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்

விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்

முந்தைய கட்டுரைநான் கடவுள், புதிய விமரிசனங்கள்
அடுத்த கட்டுரை‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது