சிவோஹம்!

அன்புள்ள ஜெ

நான் கடவுள் படத்தை இப்போதுதான் பார்த்தேன். அதற்கு முன்பு ஓம் சிவோஹம் பாடலை கேட்டேன். ஒரு மாதம் கிட்டத்தட்ட தினமும் நாலைந்துமுறை அந்தப்பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். கிறுக்கு பிடிக்கவைக்கும் பாட்டு. சரி, அந்தப்பாட்டை எங்கே கேட்டேன் என நினைக்கிறீர்கள்? கல்கத்தா கங்கைக்கரையில் ஒரு ஹிப்பி கூட்டம் அதைப்போட்டு கேட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த கிறுக்கு என்னையும் பிடித்துக் கொண்டது.

முழுக்க முழுக்க கண்வழியாகவே அறியவேண்டிய படம் நான் கடவுள். கொஞ்சம் மப்பு போட்டுக்கொண்டு பார்த்தால் நம்மை கனவுக்குள் கொண்டு போய்விடும். கதை, கதாபாத்திரம், அறிவு எதுவுமே இருக்கக்கூடாது. அந்த உலகம் நிலைகுலையச் செய்யக்கூடிய ஒன்று. தமிழில் இத்தனை ஆற்றலுடைய ஒரு சினிமா வந்திருப்பதே எனக்கு தெரியாமலிருந்தது ஆச்சரியம்தான். எனக்கு அந்த சினிமா பற்றிச் சொன்னதே ஒரு பங்காலி நண்பர்தான்

என்.ஆர்.மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்,

சென்ற ஆண்டு இணையத்தில் சினிமாக்கள் பார்க்கப்படுவதைப் பற்றி புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் நிபுணர் ஒருவர் சொன்னார், நான் கடவுள் மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என. அது எனக்கு முன்னரே தெரிந்திருந்தது.

அந்தப்படம் வந்தபோது தமிழின் விமர்சகர் எவருக்கும் அதன் காட்சிச் சட்டகங்களின் ஆற்றல் என்ன என்று தெரியவில்லை. மும்பையிலும் கல்கத்தாவிலும் திருவனந்தபுரத்திலும் இருந்த விமர்ச்கர்களே அதைப் போற்றி எழுதினர். குறிப்பாக அனுராக் காஷ்யப்.

இங்கே அதில் வழக்கமான கதையைத் தேடினர். அரசியல் சரிகளை ஆராய்ந்தனர். பாதி விமர்சனங்களில் ருத்ரன் என்ற பெயரே இல்லை, ஆரியாவின் நடிப்பு ஆரியாவின் தலைமுடி என்றே எழுதிக் கொண்டிருந்தனர்.

அத்துடன் ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் அது வெற்றிப்படமா, வசூல் என்ன என்றே பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கும்பல் அது வசூல்செய்யவில்லை என நிறுவ முயன்றது. வசூல் என்பது தயாரிப்பாளர் கவனிக்க வேண்டிய விஷயம். அது வசூல் ஆகவில்லை என்றால் நான் அடுத்த பதிமூன்றாண்டுகள் சினிமாவில் இத்தனை வெற்றிகரமாக நீடித்திருக்க முடியாது என்பதுகூட இவர்களுக்குத் தெரியாது.

இன்று அந்தப்படம் ஒரு கல்ட்கிளாஸிக் என கருதப்படுகிறது. ஒரு வணிகப்படம் அல்ல. அதனுடன் வந்த பல வணிகப்படங்கள் இருக்குமிடமே தெரியவில்லை. அது இன்று அடுத்த தலைமுறையால் பார்க்கப்படுகிறது. ஆனால் அனைவருக்குமான படம் அல்ல. நிலைகுலைவை ஓர் அக அனுபவமாக அறிபவர்களுக்கான படம்.

அதை விடுங்கள், அந்தப்பாடல் எனக்கும் ஒரு அரியநினைவு. நான் அதை ராஜா உருவாக்கும்போது உடன் இருந்தேன். உருகிய உலோகத்தாலானது போலிருக்கும் அவர் உடலும் முகமும் அப்போது. மற்ற பாடல்களை அமைக்கும்போது சொப்பு, டப்பா வைத்து விளையாடும் குழந்தை போல் இருப்பார்.

நான் அவர் அதை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்தப்பாட்டில் ஏதோ சொல்ல விரும்பி, “சார்” என்றேன். அவர் நிமிர்ந்து பார்த்து “ம்?” என்று உறுமியபோது முகம் உக்கிரமாக இருந்தது. ஒன்றுமில்லை என்று தலையசைத்துப் பின்னடைந்தேன். என் மேல் எப்போதும் மதிப்பும் கனிவும் கொண்டவர். கொஞ்சநேரம் கழித்து நிமிர்ந்து புன்னகைத்து “என்ன?” என்றார். நான் மீண்டும் ஒன்றுமில்லை என்றேன்.

காசியில் அந்தப்பாடல் படமாக்கப்படும் போதும் உடனிருந்தேன். இந்தப்பாடலில் வரும் காட்சிகள் கிட்டத்தட்ட ஒருமாதகாலம் எடுக்கப்பட்டன. காசியின் படித்துறைகளில் அந்த மொத்த அமைப்பும் செட் போடப்பட்டது. மொத்த கூட்டமும் துணைநடிகர்கள். ஏற்கனவே இருந்த காட்சியை அப்படியே மீண்டும் அதேபடி அமைத்து அதற்குள் விருப்பப்படி காமிராவை உலவவிட்டு எடுக்கப்பட்டது. நேரடியாக எடுப்பதென்றால் ரகசியக் காமிராதான் பயன்படுத்தவேண்டும், வேண்டியபடி  காட்சிச் சட்டகங்கள் அமைந்திருக்காது.

பதிநான்காண்டுகள் கடந்துவிட்டன. நினைவுகள் இன்றும் கிளர்ச்சியடையச் செய்கின்றன. சினிமா எனக்கு ஒரு தொழில் மட்டுமே என எப்போதும் சொல்லிவருகிறேன். ஆனால் எந்தத் தொழிலிலும் இத்தகைய இனிய நினைவுகள் வந்தமைய முடியாது.

ஜெ

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோடி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷணா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹனா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ண போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சத்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்

கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

நான் கடவுள்

நான் கடவுள் – சில கேள்விகள் – 2

நான் கடவுள் – சில கேள்விகள் – 1

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

டம்மி

காசியின் காட்சிகள்

காசி

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனின் ஆகாயத்தாமரை- உஷாதீபன்
அடுத்த கட்டுரைகடவுள் என்பது…