விக்ரமாதித்யன், விமர்சனங்கள்

எழுத்தின் மீதான வேட்கையில் சென்னைக்கு வர நினைப்பவர்கள் எவருக்கும் ஆதர்சபிம்பமாக நிற்பது கவிஞர் விக்ரமாதித்யன் உருவமே. காரணம் விக்ரமாதித்யன்  கவிஞராக மட்டுமே வாழ்வது என்ற சவாலில் தன்வாழ்வின் பெரும்பகுதியை கழித்து இன்றும் சென்னையில் தனக்கென தனியாக தங்குமிடம் இன்றி கையில் காசின்றி பெருநகரப் பாணனைப் போல  தன்வீரியம் குறையாமல் கவிதைகளின் வழியாக மட்டுமே தன் இருப்பை சாத்தியமாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பெருநகரப் பாணன். எஸ்.ராமகிருஷ்ணன்

சில நேரங்களில் வாழ்க்கை மிகவும் படுத்தி எடுத்துவிடும். எதையும் சொல்ல முடியாதபடி நெஞ்சடைத்தது போல இருக்கும். நம்ப முடியாத அளவுக்கு வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும்போது நம் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது.

விக்ரமாதித்யன் கவிதைகள் -சித்திரவீதிக்காரன்

இம்மைக்கு அம்மை, மறுமைக்கு மனைவி, வாழையடி வாழையாக வாழ்ந்து கொய்யாப் பழம் என்னும் செழுமையான வாழ்வைக் கொய்ய தன் கவிதைகள் வழியாகவும் வாழ்வின் வழியாகவும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பவர்தான் விக்ரமாதித்யன்.

மலைமீது ஓய்வுகொள்ளும் கவிஞன். சங்கரராமசுப்ரமணியன்

தமிழில் கவிதை எழுதுபவர்களில் மிக அதிகமாக எழுதுபவரும் மிகச் சரளமாக எழுதுபவரும் மிக இயல்பெழுச்சியோடு எழுதுபவரும் விக்ரமாதித்யன் என்பது இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திலிருந்து கண்டடைந்த முதல் செய்தி. கவிஞனாகவன்றி தனக்கு வேறொரு பொது அடையாளமில்லை என்பதை இருப்பின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் நிறுவுவது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டுமிருக்கிறார் என்பது அடுத்த செய்தி.

விக்ரமாதித்யன் கவிதைகள் பற்றி சுகுமாரன்

‘Wanderer’ poet Vikramadityan wins Vishnupuram Award

முந்தைய கட்டுரைஇரண்டாமவள்
அடுத்த கட்டுரைபுகைப்பட முகங்கள் -கடிதம்