ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி

தேசமற்றவர்கள்

இன்றைய திமுக அரசின்மேல் இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் அநீதியாகப் பழிசுமத்தி வருகின்றனர். அப்பழியை அழிக்க முதன்மை வழி என்பது இந்த அகதிகளுக்கு குடியுரிமைக்காக திமுக குரலெழுப்புவதுதான். அத்துடன் உடனடியாக அவர்களுக்கு அரச உதவிகள், வேலை முன்னுரிமைகள் ஆகியவற்றை வழங்குவது. அரசின் செவிகளுக்கு இது சென்று சேரவேண்டும்

இவ்வரிகளை எழுதிய சிலநாட்களிலேயே இந்த சட்டமன்றத்திலேயே அறிவிப்பு வெளிவரும் என எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே எதிர்பார்த்திருந்தேன். இந்த அறிவிப்பு நிறைவளிக்கிறது. இது தமிழகத்தின் கடமை. நெடுநாட்கள் புறக்கணிக்கப்பட்ட மக்களின் துயரை செவிகொள்ளும் அரசு அமைந்திருப்பது நல்லூழ்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சரவைக்கும் அதிகாரிகளுக்கும் குடிமகனாக நன்றி, வணக்கம்.


ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்
முந்தைய கட்டுரைபுதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-4
அடுத்த கட்டுரைஅம்பும் நிழலும்