“சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?” என்கிற எண்ணம் நம் பெரும்பாலானோர் மனத்தில் உண்டு. எந்தப் புதிய நிலப் பரப்பிற்குச் சென்றாலும் அவற்றை நம் நிலத்தோடு பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம். ஜெயமோகனும் அதனையே செய்கிறார். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் போது அதன் தன்மையோடு நம் இந்திய மண்ணையும் மக்களையும் பொருத்திப் பார்க்கிறார்.
புல்வெளி தேசம் – இந்துமதி மனோகரன்