கடிதங்கள்

ஜெ..

இன்றைய காலகட்டம் முன்னெப்போதையும் விட சமூக ரீதியாக ன்றாக இருக்கிறது என்பது என் எண்ணம். விலக்கப்பட்டவர்கள் கட்டுரையும் அதை உறுதிப் படுத்துகிறது. பரிபூர்ணம் என்பது சாத்தியமேயில்லை. தீண்டாமை, பெண்ணடிமைக் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால் இன்றும் உள்ளது நீறு பூத்த நெருப்பாக. காலம் கொஞ்சம் கொஞ்சமாக அதை அழித்து வருகிறது.

 

புளியமரத்தின் கதையில், ஒரு ராஜ குடும்பத்தைப் பற்றிக் கூறும்போது, அவங்களும் இப்போ டைப்பிங்கும் ஷார்ட் ஹேண்டும் படிச்சாகனும் கும்பி களுவ என்ற வாக்கியம் வரும். இதுவே இன்றைய நிதர்சனம். பழைய வர்ணாசிரம விதிகள் மாறி இன்று கல்வியும் வியாபாரமும் புதிய வர்ணாசிரமங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. பிறப்பால் கிடைக்கும் சமூக அங்கீகாரம் குறைந்து வருகிறது.

 

பிராமணர்களை கல்வி மற்றும் அதிகார மையங்களில் இருந்து விரட்டி விட்ட திராவிட இயக்கம், காலியிடங்களில் பிற்படுத்தப் பட்ட சாதியினரை நிரப்பியது அதன் பலன் இன்று தமிழகத்தில் சமூக, பொருளாதார  இடங்களில் காணக் கிடைக்கிறது. இது திராவிட இயக்கங்களின் மிகப் பெரும் பங்களிப்பு. கத்தியின்றி ரத்தமின்றி நடந்த சமூக மாற்றம் இது. ஆனால் ந்த வாய்ப்பு தாழ்த்தப் பட்ட மக்களுக்குக் கிடைக்க வில்லை இங்கு உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி மூலமாக வரக்கூடும் எனத் தோன்றுகிறது.

பூசாரிகள் (சாமியார்கள், முல்லாக்கள் மற்றும் பிற மதக் காவலர்கள்) கைகளில் இந்திய சமூகம் அடை படாமல் இருப்பதுதான் இந்திய சமூகத்துக்குக் கிடைத்த பெரிய வரம்  மக்களின் மிகப் பெரும் ஆயுதமான வாக்குரிமையும் சேர்ந்து பாரத சமுதாயத்தில் தொடர்ந்து சமூக மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

எத்தனை எத்தனை பெண்கள் எவ்வளவு வேதனைகள் ஏன் இந்த மதக் காவலர்கள் கடுமையாகப் பெண்களை ஒடுக்கினார்கள், இன்றும் பல நாடுகளில் ஒடுக்கிக் கொண்டே இருக்கிறார்கள்??

பாலா

 

**

 பாலா,
உண்மை. மனித சமூகம் மெல்ல   தன்னை சீர்படுத்திக்கொன்டே வருகிறதென்பதே என் எண்ணம். அதிகாரத்தை ஒரு சிறு இனக்குழு கையாளும்போது அது இனத்தூய்மையை தன் முதல் பிரச்சினையாக கொள்கிறது. அந்நிலையில் மையமான அடக்குமுறை கருப்பையின்மீதுதான்
ஜெ
 

//மிக நுண்ணிய காயங்களுக்கு ஒருவகை எறும்புகளைப் பயன்படுத்தியதாகவும் தகவல் உண்டு. இவை பெரிய சிவப்பு எறும்புகள், இமையமலைப்பகுதிகளில் கிடைப்பவை. வெட்டுப்பிளவின் மீது இரு விளிம்புகளையும் தொடும்படியாக இவற்றை சரியாகப் பொருத்தி கடிக்கவிடுவார்கள். இவை இறுகக் கடித்ததுமே இவற்றின்மீது மயில்துத்தம் கலந்த எண்ணையை விடுவார்கள். எண்ணையால் மூடப்பட்டு மூச்சுத்திணறும்போது எறும்பு உயிர்வேகத்துடன் இறுக்கமாகக் கடித்து அப்படியே இறுகக்கடித்தபடியே இருந்து இறந்துவிடும். காயம் ஆறிய பொருக்குடன் இறந்த எறும்பின் உடல்களும் உலர்ந்து வந்துவிடும்.//
 
இது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.  Mel Gibson இயக்கிய Apocalypto எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படிப்பட்ட காட்சி உண்டு.  சிறு குழந்தையின் காலில் ஏற்பட்ட காயத்தை இம்மாதிரியான எறும்பைக் கொண்டும் அந்தக் குழந்தையின் தாய் சிகிச்சை செய்வதை காட்சிபடுத்தியிருப்பார்கள்.  மயில்துத்தம் எண்ணெய் விடுவதற்கு பதிலாக அந்த எறும்பின் தலையை அப்படியே கிள்ளி எடுத்துவிடுவாள்.  இறந்து போன எறும்பின் உடல் மட்டும் காயத்தின் இருபக்கமும் இறுக பிடித்துக் கொண்டிருக்கும்.
 
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் இது முழுவதும் ‘மாயன்’ எனப்படும் செவ்விந்திய பழங்குடியினரின் மொழியில் எடுக்கப்பட்டது.  இவர்கள் மெக்ஸிகோ பகுதியினை சேர்ந்த பழங்குடியினர் என்று தெரிகிறது.  இந்த மாயர்கள் ஒருவகையில் இந்திய திராவிடர்களாகவும் (தமிழர்) இருக்க வாய்ப்புண்டு என்று ஒரு ஆராய்ச்சி கட்டுரை கூட படித்திருந்தேன்.
 
 
நட்புடன்
ஸ்ரீதர்
 
அன்புள்ள ஸ்ரீதர்
சரக சம்ஹிதையில் இந்த மருத்துவம் பற்றிஒய ஒரு குறிப்பு வருகிறது என்று கேட்ட நினைவு அது. பண்டைய மருத்துவம் பல கோணங்களில் மனிதனின் கற்பனையும் சாத்தியங்களும் விரிந்த ஒரு தளம். அன்று செய்ற்கையான விஷயங்களை அறியாமல் அனைத்துக்குமே இயற்கையை ஆராய்ந்தார்கள் என்று படுகிறது
ஜெ
**

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் ‘வேராழம்‘ கண்டேன். எண்ணக்குவியல்களை கிளறிய பதிவு. ப்ரீ யு.கே.ஜி காலத்துக்கு முன்பிருந்தே (ஒரு வயது?) என் நினைவுகள் மிகத் துல்லியமாக என்னை தொடர்கின்றன. பெரிதும், என் அம்மா அப்பாவின் நண்பர்கள், நாங்கள் குடியிருந்த அத்தனை வீடுகள், அவற்றின் போர்ஷன்கள், அங்கிருந்த குடும்பங்கள், வீடிருந்த தெருக்கள், மணங்கள், கேட்ட பாடல்கள், வைத்திருந்த பொருட்கள், தோழர் தோழிகள், செய்த பாலியல் சேட்டைகள் (நம்ப மாட்டீர்கள்!), அனைத்தும் – நீங்கள் சொல்வது போல், நினைவு கூர்ந்தால் மீட்டெடுக்க முடியாத வாழ்வின் கட்டமே இல்லை எனலாம். பின்னாளில் இவற்றை நான் சொல்லும் போதெல்லாம், என் தாய் தந்தை தவிர, என் தம்பி ஒரு நம்ப முடியாத பாவனையுடன் கேட்டதும் நினைவில் இருக்கிறது.

தாங்கள் Sigmund Freud   படித்திருப்பீர்கள். அவரது வாழ்விலும் நினைவுகள் ஆறு மாதத்தில் துவங்குகின்றன. பெரிதும் அவை பாலியல் அடையாளக் (தன் தாயினதும் உட்பட) கூறுகளை ஆராய்தல், இருப்பை உணர்தல் மற்றும், சூழலின் வகைகளை உணர்தல் என்றே நினைவுகள் ஆரம்பிப்பதாக அவர் கூறியிருக்கிறார். இரண்டு வயதில் மேசை மீதிருந்து கீழே உணவை எடுக்க எட்டி, விழுந்து கீழ் தாடையில் தையல் இட்டதைப் போல.

இளைய பதிவுகள் என்னவோ அனைத்து மாந்தருக்கும் பொதுவென தோன்றுகிறது;  ஆயினும், அந்நினைவுகளை பின்னாளில் மீட்டெடுப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அக்காரணங்களையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் (சில நம்மளவில் ஏற்க முடிவதில்லை என்றாலும்).

சரவணன்


http://sarandeva.blogspot.com/


அன்புள்ள சரவணன்

நாம் ஒவ்வொருவருக்கும் வேரின் ஆழம் எப்படியோ தெரிந்திருக்கும் . நம் மரபில் ஒரு கருத்து உண்டு. மனிதனின் தொடக்கப்புள்ளி பார்த்திவப் பரம அணு. அது ஒரு துளி. ஒரு கருத்துத்துளி என்று சொல்லலாம். ஆலமரம் விதைக்குள் கரு வடிவில் இருப்பதுபோல அது மனித விந்துவில் இருக்கிறது. அது தன் நெடுந்துயில் விட்டு உணரும் முதல்கணமே நான் என உணர்கிறது. அதாவது ஆணவமலம் — தன்னுணர்வு– அதற்கு உருவாகிறது! அதன்பின் நான் வளர்வேனாக என அது எண்ணுகிறது. வளர்கிறது
****
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
 
வணக்கம். இதுவே நான் உங்களுக்கு எழுத நினைத்திருந்த முதல் கடிதம். ஆனால் ஒரு பெரும் எழுத்தாளாரிடம் சிறு வாசகனுக்கு தொடர்பு கொள்வதில் உள்ள தயக்கம் காரணாமாக அனுப்பவில்லை. இப்போது தயக்கத்தை மீறி சில வாரிகள்.
 
உங்கள் ‘காடு’ நாவலை எனது நண்பன் படிக்க கொடுத்தான். அந்த நாவலின் மொழியின் விச்சில் என் சுயம் எங்கோ ஆட்டம் கண்டது. ஏனெனில் சிட்னி ஷெல்டன் அலிஸ்டர் மெக்லைன் போன்றவர்களை படித்து பூhpப்படைந்த காலகட்டம். ஆனால் அவர்கள்தான் கலையின் ஊற்று என்று நினைக்காத அளவிற்கு விவேகமும் புhpதலும் இருந்தது.
 
உங்கள் புத்தகங்ளை படிக்க ஆரம்பித்தேன். இந்து ஞான மரபில் ஆறு தாpசனங்கள்இ கன்னியாகுமாpஇ உள்ளுணர்வின் தடத்தில்இ ஏழாம் உலகம்இ இலக்கிய முன்னோடிகளின் தொகுப்பு[ மற்றும் இணையத்தில்; எழுதுபவை.
 
 
உங்களிடமிருந்து ஒவ்வொரு விஷயங்களாக என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. இலக்கிய ரசனைஇ ஆன்மீக தேடல்இ மரபு குறித்த மறுபாpசீலனைஇ சுய சிந்தனைஇ (பிடித்த வாp்வெள்ளையன் கக்கி துப்புவதே மெய்ஞானம்) இன்னும் விhpந்து கொண்டே செல்கிறது. நீங்கள் சொல்வீர்களேஸ என்னுள் ஒரு காடு இருக்கிறது. அதை வெளியில் பிரதிபலித்து பார்த்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த பிரம்மாண்ட உணர்வின் ஒரு சிறு கூறு போல.
 
எனக்கு வாழ்க்கையின் பல தளங்களை தொட்டு காட்டியதற்காக……
 
நன்றியுடன்
இளையராஜா
அன்புள்ள இளையராஜா
நெடுநாட்களாக கடிதம் போடத்தவறியமைக்கு மன்னிக்கவும். உங்கள் கடிதம் ஸ்பாம் பட்டியலுக்குள் எப்படியோ சென்றுவிட்டது. இலக்கியம் மூலம் மிக அந்தரங்கமான ஓர் உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு தங்களைப்போன்றவர்கள் எழுதும் கடிதங்களே எனக்கு ஆதாரமாக இருக்கின்றன.  எழுதும்போது உருவாகும் தன்னம்பிக்கையும் முழுமையும் எழுதி அச்சாகும்போது பெரும்பாலும் வருவதில்லை. அதை வாசகர்கள் எவரேனும் சொல்லும்போதுதான் அந்த நம்பிக்கை மீண்டும் எழுகிறது.
இலக்கியவாசிப்பு தொடங்கும்போது முதலில் நம்முடைய பிம்பங்கள் தலைகீ£ழாக ஆகின்றன. பின்னர் சில வலுவான கருத்துந்லைகள் உருவாகின்றன. பின்னர் காலப்போக்கில் அந்த பிம்பங்களைக் கலைத்துக் கலைத்து நம்மை கூர்மைப்படுத்தியபடியே செல்கிறோம்.
அலிஸ்டார் மக்லீன் ஒரு காலத்தில் நானும் விரும்பிப்படித்த எழுத்தாளர். எச் எம் எஸ் யுலிஸஸ் என்று நினைக்கிறேன். பின்னர் சோவியத் ருஷ்யாவை மிகக் கொடூரமான அடக்குமுறைநாடாகக் காட்டும் ஒரு நாவல். சாண்டில்யன் நவீன சாகஸ நாவல் எழுதியது போல. மிகைபப்டுத்தப்பட கதாபாத்திரச்சித்தரிப்பு.
அவ்வகை எழுத்து நம் கற்பனைக்குப் பயிற்சி அளிக்கிறது,மகிழ்விக்கிறது. ஆனால் இலக்கியம் கற்பனையை ஒரு கருவியாகக் கொண்டு வாழ்க்கையை அறிய நமக்குக் கற்பிக்கிறது

 

விலக்கப்பட்டவர்கள்:கடிதங்கள்

விலக்கப்பட்டவர்கள்

வேராழம்

 

 

முந்தைய கட்டுரைதமிழ்ப்பண்பாட்டைபேணுதல்:கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தமுள் ,இருகடிதங்கள்