ஜெயராம், கடிதங்கள்

கல்வலைக்கோடுகள்

கல்வலைக்கோடுகள்,ஜெயராம் கடிதம்

ஜெயராமின் கடிதம் ஒரு பெரிய அனுபவத்தை அளித்தது. மொத்தமாக அந்த உரையாடலே ஒரு அருமையான கதைபோல ஆழமான புரிதல்களை அளித்தது. நீங்கள் அவருடைய ஓவியங்களைப் பற்றி எழுதியது, அதற்கு வந்த கடிதம், அவர் அளித்த பதில் எல்லாமே கலை செயல்படும் விதம் என்ன, கலைஞர்களின் மனநிலைகள் என்ன என்ற புரிதல்களை அளித்தன. மின்னல்கள் போல அற்புதமான பல வரிகள்.

குறிப்பாக போர்ப்பயிற்சிக்கும் ஓவியக் கலைக்குமான உறவு. நான் நினைத்தே பார்த்ததில்லை. ஆனால் போர்ப்பயிற்சிக்கும் இசைக்கும் உறவுண்டு என்று தெரியும். ஓவியக்கோடுகளைக் கொண்டே அவற்றிலுள்ள போர்க்கலைத் தன்மையை உணரமுடியும் என்பது ஆச்சரியமானது

அதேபோல கருமையைப் பற்றி அவர் சொன்னது. அவருடைய புரிதல் கவித்துவமானது. மொழியில் கவித்துவத்தை அடைந்தபின் வண்ணங்களில் முயல்கிறார். மேலைநாட்டு ஓவியர்கள் எல்லாருமே ஆழமாகப் பேசவும்கூடியவர்கள். இங்கே சில்லறை அரசியல்தான் பேசுகிறார்கள். ஜெயராம் அழகியலை, உணர்வுக்ளைப் பேசுகிறார் என்பது நிறைவளிக்கிறது

ஆர்.பாலகிருஷ்ணன்

ஜெயராம் எழுதிய கடிதம் கூர்மையானது. தமிழில் கலை உருவாக்கம் பற்றி எழுதப்பட்ட நல்ல குறிப்புகளில் ஒன்று. அவர் எழுதிய முந்தைய கடிதங்களைப் பார்த்தேன். அவருடைய மொழி உணர்வுபூர்வமானது. முன்பு ஏ.வி.மணிகண்டன் எழுதிய சில கட்டுரைகளில் கலையின் செயல்பாட்டை மொழியால் சொல்லிவிட முயலும் நுட்பமான பதிவு இருந்தது.

ஜெயராமுக்கு வாழ்த்துக்கள்

மகாதேவன்

அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்

இந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்

கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்

புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]

ஜெயராமின் கடிதம் ரொம்ப பிடித்தது.  கடந்த new இயர் நிகழ்வில் நேரில் பார்த்திருக்கிறேன்,  ஓவியர் னு தெரியும், கொஞ்சம் பேசியிருக்கேன்,  இன்று வெளிவந்த கடிதம் பார்த்து அசந்துட்டேன்,  அவருக்கு என் அன்பு.  காமம் காதலாகி பின்பு தூய அன்பாக மாறுவது போல வீரம் தற்காப்பு பின் கலையாக மாறுவது னு சொல்ற வரி படிச்சு அசந்துட்டேன்,  இந்த வரிசை அடுக்கு அமைப்பு பார்த்து. கடிதத்தின் மொழிநடை கூட நல்லா இருக்கு. அவருக்கு என்   வாழ்த்துக்கள்

ராதாகிருஷ்ணன்

கல்வலைக்கோடுகள்- கடிதம்

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? சஷி தரூர்

அணுக்கம்- ஒரு கடிதம்

பேச்சும் பயிற்சியும்

வாழ்தலின் பரிசு

முந்தைய கட்டுரைஅ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைஇல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்பு