ஒரு கோவை வாசகர்

book

ஐயா,

உங்களின் தன்மீட்சி எனும் மிக உயரிய நூல் படிக்க பாக்கியம் கிடைத்தது, படிக்க தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான நூலாகும், பலவகைப்பட்ட உயரிய அறிவுப்பூர்வமான கருத்துக்கள், பாராட்டுக்கள் ஐயா

உங்களின் உயரிய மற்ற நூல்கள் படிக்க மிக ஆர்வமாய் ஆசையாய் உள்ளேன் ஐயா, எனக்கு மளிகை கடையில் வேலை,பணம் தந்து வாங்க சிரமம், ஆகவே உங்கள் உயரிய நூல்களை படிக்க புண்ணியம் தருமாறு தாழ்மையுடன் கேட்கிறேன், உதவுங்கள் ஐயா,

எண் தந்தால் பேசுகிறேன், போன் மூலம் மெயில் அனுப்புகிறேன் என்னை வசதியுள்ளவன் என நினைக்காதீர்கள்,

வணக்கம்

நலமுடன் வாழ்க

வேலுமணி

[email protected]

***

அன்புள்ள வேலுமணி,

தன்மீட்சி படித்தமைக்கு மகிழ்ச்சி. அது ஒரு நல்ல தொடக்க நூல்.

என்னுடைய கிட்டத்தட்ட எல்லா நூல்களையும் முற்றிலும் இலவசமாக என்னுடைய இணையதளமாகிய www.jeyamohan.in என்னும் முகவரியில் வாசிக்கலாம். அதில் கிளிக் செய்தால் போதும். செல்போனிலேயே படிக்கலாம். எங்கும் படிப்பதற்கு செல்போன் மிக ஏற்றது.

விலாசம் அனுப்புங்கள், சிலநூல்கள் அனுப்புகிறேன்

ஜெ

***

அன்புள்ள ஐயா

நூல்கள் வந்தன. நூறு நாற்காலிகள்,மிக அறுபுதம் ஐயா,இன்னனும் இப்படி சாதி வெறி பிடித்து மனித மனத்தை புரிந்து கொள்ளாத மனிதர்கள் வாழ்கிறார்கள் என நினைக்கும் போது மனம் மிக மிக வெட்கி வேதனை வருகிறது,மிக மிக அற்புதமான உயரிய நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு தருமாறு கேட்கிறேன் வணக்கம் வேலுமணி கோவை நலமுடன் வாழ்க

வேலுமணி

***

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம், டொரன்டோ-கடிதம்
அடுத்த கட்டுரைகிரானடாவும், இஸ்லாமியரின் அச்சமும் -கடிதம்