வாசிப்பின் வழிகள்

 வாசிப்பின் வழிகள் வாங்க…

நவீனத் தமிழிலக்கியக் களத்திற்குள் ஒருவர் தற்செயலாகவே நுழைகிறார். பெரும்பாலும் எங்காவது எவராவது அளிக்கும் ஒரு நூலை புரட்டிப்பார்த்து, ஆர்வம் கொண்டு படிக்க ஆரம்பித்து இலக்கிய உலகுக்குள் நுழைகிறார். இங்கே அவர் ஏராளமான கேள்விகளையும் சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது. பல குழப்பங்கள் அவருக்கே உருவாகின்றன. அவற்றை அவர் தொடர்ந்த விவாதம் வழியாகவே தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்நூலில் அத்தகைய விவாதங்கள் கேள்விபதில் வடிவில் இடம்பெற்றுள்ளன. இலக்கிய உலகுக்குள் இன்று நுழையும் வாசகர்கள் பெரும்பாலும் இணையதள வாசிப்பு வழியாகவே வருகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தோன்றும் அடிப்படையான ஐயங்களை கடிதங்களாக எழுதி அனுப்புகிறார்கள். அவற்றுக்கு பதில் சொல்லும்போது அதே வகையான ஐயங்கள் கொண்ட பல்லாயிரம்பேர் உள்ளனர் என்று எண்ணி, அவர்களுக்கும் சேர்த்து விரிவாகப் பதில்சொல்வது என் வழக்கம். அப்படிச் சொல்லப்பட்ட பதில்கள் இவை

தனித்தனியான கேள்விபதில்கள் என்றாலும் ஒட்டுமொத்தமாக தொகுக்கையில் ஒரே உரையாடலாக இவை ஆவதை காணலாம். ஒரு வினாவுக்கான பதில் இன்னொரு வினாவுக்கு வழிவகுக்கிறது. கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே தரப்பாக ஆகின்றன. வாசிப்பை ஒழுங்குபடுத்திக்கொள்ள, முனைப்பாக்கிக்கொள்ள முயலும் அனைவருக்கும் இவை உதவும் என நினைக்கிறேன்.

இந்நூலை விஷ்ணுபுரம் அமைப்புக்கே குடும்ப மருத்துவரான நண்பர் மாரிராஜ் இந்திரன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

 

ஜெ

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை அந்த முகில் இந்த முகில் முன்னுரை
பத்துலட்சம் காலடிகள் முன்னுரை இருகலைஞர்கள் முன்னுரை உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை கதாநாயகி முன்னுரை வாசிப்பின் வழிகள் முன்னுரை
முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபுதிய எழுத்தாளர்களுக்கு…