சிறுகதை – மின்னூல்கள்- கடிதங்கள்

ஜெயமோகன் அமேசான் நூல்கள்

பெருமதிப்புற்குரிய ஜெயமோகனுக்கு,

பத்துலட்சம் காலடிதடங்கள் -நான் சமீபத்தில் அதிக முறை வாசித்த கதைகளில் ஒன்று. துப்பறியும் அம்சம் படிக்கும் பொழுது கிளர்ச்சி அடையச் செய்தாலும் ஆனால் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவது எம்.ஏ.அப்துல்லாவின் பாத்திரமும், மாப்பிளைச் சமூக சித்தரிப்பும். இந்த ஐந்து கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும், மிக முக்கிய காரணம் இந்த ஐந்தும் பிறருக்கு சொல்வதற்கு மிகவும் ஏற்றமுடையவை.

வீட்டில், என் மனைவியிடம்  பத்துலட்சம் காலடிதடங்கள், ஓநாய்யின் மூக்கு, வேட்டு இம்மூன்றும் பலமுறைச்  சொல்லி இருக்கிறேன். பத்துலட்சம் காலடிதடங்கள் கதையை ஒரு நாள் நண்பர்களிடம்  மது அருந்தி கொண்டுஇருக்கும் போது சொன்னேன், கதை முடியும் வரை அந்த அறையில் இருந்த அமைதியில் என்னை ஔசேப்பச்சனாக எண்ணி  ஒருகனம் பெருமை அடைந்தேன்.எதோ நானே அந்த சம்பவங்கள் அனைத்திலும் நேரடியாகா பங்குபெற்று என் அனுபவங்களை சொல்வது போல இருந்தது.எனக்குள்  திரும்ப திரும்ப எழும் கேள்வி இது எழுதுவது எப்படி உங்களுக்கு சத்தியமாகிறது, எத்தனை விழிகள் இருந்தால் இவ்வளவு விஷயங்களை அவதானிக்க முடியும். கிண்டிலில் இந்த தொகுதியை பார்த்தவுடன் துள்ளி குதித்து வாங்கி விட்டேன்.மீண்டும் மீண்டும் இதை படிப்பேன்,  என்னை ஔசேப்பச்சானாக உணர வைக்கும் எந்த ஒரு தருணத்தையும் இழக்க கூடாது என்ற என்

சுயநலத்திற்காக மட்டுமே இக்கதைகளை  மீண்டும் மீண்டும்  நிச்சயம் சொல்லுவன்.

நன்றி

ராம்பிரசாத்

அன்புள்ள ஜெ

என்னுடைய பிரியத்திற்குரிய கதைகள் மின்னூல்களாக வருவதை அறிந்தேன். அந்த போஸ்டர்களை வாட்ஸப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து மகிழ்ந்தேன். உண்மையில் நிறைவாக இருக்கிறது. ஜெயமோகன்.இன் தளம் எனக்கு ஒரு போதிமரம் போல. சென்ற ஐந்தாண்டுகளில் நான் அடைந்த தன்னம்பிக்கை, மொழித்திறன், சிந்தனை எல்லாமே அதிலிருந்து வந்ததுதான். ஆனால் அதை முழுக்கமுழுக்க இலவசமாக வாசிக்கிறோம் என்னும் தயக்கம் இருந்தது. நீங்கள் இதற்கு ஒரு கட்டணம் வைக்கலாமே என நினைத்து ஒரு கடிதத்திலும் அதைச் சொல்லியிருந்தேன். இந்தப்பதிப்பகம் நீங்கள் நடத்துவது என நினைக்கிறேன். இந்த மின்னூல்களை வாங்குவது உங்கள் தளத்திற்கு நான் அளிக்கும் கட்டணம், உங்கள் பணிகளுக்கான என் காணிக்கை என எண்ணிக்கொள்கிறேன்

மாதவ்

[விளம்பர வடிவமைப்பு கீதா செந்தில்குமார்]

முந்தைய கட்டுரைஇலக்கியத்தின் நுழைவாயிலில்
அடுத்த கட்டுரைஒரு கனவு நிலம் தேவை…