வெண்முரசு நாள் – குரு பூர்ணிமா – 23/07/2021 வெள்ளி இரவு 8 மணி தொடங்கி
2020 ம் ஆண்டு துவங்கி, குரு பூர்ணிமா முழுநிலவு நாளை நாம் வெண்முரசு நாளாக கொண்டாடி வருகிறோம். தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில் ஞான ஒளி ஏற்றிய ஆசிரியர்களை வழிப்பட்டு வருகிறோம். பாரதம் இயற்றிய வியாசரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
2020 ம் வருடம், மகாபாரதம், தமிழில், நாவல் வடிவில், ‘வெண்முரசு’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்டது. தமிழ் மொழியில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளில் ஒன்று இந்த நாவல்வரிசை.
இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக நவீன வாசகனுக்கான மொழியில் மறுஆக்கம் செய்துள்ளது. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.
ஜனவரி 2014ல் துவங்கி, தினமும் ஒரு அத்தியாயமாக, 7 வருடங்களில் 26 நாவல்களாக 25000 பக்கங்களில் இயற்றப்பட்டுள்ள மகத்தான ஆக்கம் வெண்முரசு. இது உலகின் மிகப்பெரிய நாவல்களில் ஒன்றாகும்.
இந்த பெரும் முயற்சி முழுமையடைந்து, இந்நாவல் எழுதி நிறைவு செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து ஆண்டு தோறும் குருபூர்ணிமா முழுநிலவு நாளில் வெண்முரசு வாசிப்பு, ஆசிரியருடனான உரையாடல் என கொண்டாடுகிறோம்.
நேரில் முழுநிலவின் வெளிச்சத்தில் ஆசிரியருடன் உரையாடுவதே இந்நிகழ்வின் வடிவம், சூழல் ஒத்துழைக்காமையால் இணையம் வழியே சந்திப்பு.
இவ்வருடம், குரு பூர்ணிமா (ஜூலை 23, 2021) அன்று, ஆசிரியருடன் ஜூம் மீட்டிங் மற்றும் யூடியூப் லைவ் வழியாக உரையாட உங்களை அழைக்கிறோம். தங்கள் கேள்விகள், கருத்துக்களை லைவின் கமண்டில் இடலாம். வருக.
ஜூலை 23, 2021, வெள்ளி இரவு 8 மணி முதல்
யூட்யூப் லைவ்: https://youtu.be/sCxViv6RCGY
ஜூம் மீட்டிங் :
https://us02web.zoom.us/j/4625258729
Meeting ID: 462 525 8729
(முதல் 100 பேர் மட்டும்)
வெண்முரசு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.
அனைவரும் யூட்யூப் லைவில் கலந்துகொள்ளலாம், வருக.
விஷ்ணுபுரம் நண்பர்கள்
தொடர்புக்கு: [email protected]
வாட்ஸப் : +91 9965315137; +91 98940 33123