மலைபூத்தபோது

அமேசான் நூல்கள்

சிறுகதையின் இயல்கைகளில் ஒன்று அது கவிதையை நெருங்கமுடியும் என்பது. கவிதை இன்று ஒருவகை நுண்கதையாக ஆகிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவ்விரண்டு நகர்வுகளும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. கவிதை தன் பாடல்தன்மையை கைவிட்டு உரைநடையை நோக்கியும் சித்தரிப்பு நோக்கியும் வந்தது. கதை வாழக்கையைச் சொல்வது என்பதை விட்டு மேலெழுந்து உருவகங்கள், படிமங்கள், மறைபொருள்தன்மை என கவிதைக்கான அழகியலை கைக்கொள்ளலாயிற்று. இன்று அவற்றுக்கிடையேயான வேறுபாடு மிகமிகச் சிறியது.

இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை.

ஆகவே உணர்வெழுச்சிகளை, வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை. புன்னகைக்க வைக்கும், கற்பனை விரியச்செய்யும், வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம், அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது.

அவ்வகைமைக்குள் பல வழிகளை இக்கதைகள் தொடர்கின்றன.எரிமருள் போன்றவை வண்ணக்கலைவின் அழகு கொண்டவை என்றால் கழுமாடன் போன்றவை தொன்மத்தை தொட்டு விரிபவை. அனைத்துமே கவித்த்துவத்தின் வண்ணங்கள்தான். கதைகள் என்றவகையில் இவை வாழ்க்கையின் உயிர்த்துளி ஒன்றை ஊசிமுனையால் என தொட முயல்பவை.

மதிப்பிற்குரிய கோவை இயகாக்கோ சுப்ரமணியம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

வான்நெசவு வாங்க

***

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை

 

முந்தைய கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-6
அடுத்த கட்டுரைவிகடன் பேட்டி- கடிதங்கள்