அறிவதும் அறியப்படுவதும்

அன்புள்ள ஜெ,

“இந்த விஷ்ணுபுரத்தில் எதுவும்  ஒருமுறையாவது ஏற்கனவே நடந்திருக்கும். எனவே எல்லாமே மீண்டும் நிகழும் என்று ஐதீகம். என் தந்தை இதை இப்படி விளக்குவார். புதிதாக ஏதும் நிகழாது என்று இதற்குப் பொருள். “ [Vishnupuram]

இதை நினைவு கூரும் விதமாக இருந்தது, இந்த காணொளியை கண்ட பிறகு.

நாம் காணும் பொருட்கள் எல்லாம் (பிரத்யட்சமாகவும் அனுமானம் மூலமாகவும்) நம்முடைய  புலன் உணர்வகளைக் (perception) கொண்டே அமைகிறது. இயற்பியலே புலன் உணர்வகளின் அறிவியல் என்று சொல்லலாம். இந்த புலன் உணர்வுகளால் அறியப்படும் திரைக்கு பின்னால் உள்ளது ஒரே ஒரு பிரபஞ்சம் முழுமைக்குமான பிரக்ஞை மடடுமே என்கிறது கருத்துவாதம் (idealism). இது அப்படியே சின்மாத்ர என்று சொல்லப்படும் அத்வைத சித்தாந்தமாகும்.

நாம் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் ப்ரக்ஞை உள்ளது, சிறிதளவேனும். அடிப்படையான பண்டங்கள் (எலக்ட் ரான், குவார்க்) கூட தன் இயல்பிலே அமைந்த ப்ரக்ஞையின் மூலமாக ஸ்தூலமாக நமக்கு தென்படுகின்றன. ஆகவே நாம் காணும் இந்த ஸ்தூல பிரபஞ்சம் உண்மை அவை ப்ரக்ஞையின் ஒரு வித வடிவங்களே, என்று புற தொகுப்புகளையும் (ஸ்தூலங்கள்) அக தொகுப்புகளைம் (மனம் முதலான் சூட்சுமங்கள்) ஒன்றிணைப்பது  அனைத்து மனவாதம் (panpsychism). இது லீலாவிபூதியில் (நாம் காணும் பிரபஞ்சம்) காணப்படும் எல்லா பொருட்களும் உண்மை மட்டுமல்லாது அவை ஒவ்வொன்றுக்குள்ளேயும் சேதனமான (ப்ரக்ஞையுள்ள) ஒரு ஆத்மா உள்ளது என்று சொல்லும் விசிஷ்டாத்வைதமாக கொள்ளலாம். (விசிஷ்டாத்வைதம் இதற்கு மேலும் எல்லா ஆத்மாவுக்குள்ளும் உள்ளுறையாக ஈஸ்வரன் இருக்கிறான் என்கிறது. அனைத்து மனவாதம் இதை பேசுவதில்லை, ப்ரக்ஞையோடு நிறுத்தி கொள்கிறது).

கருத்துவாதத்தை முன்னிருத்தி வருபவர் பெர்னார்டொ காஸ்ட்ரப், அவரிடம் அனைத்து மனவாதத்தை முன்னிருத்தும் ஃபிலிப் கோஃப் வைக்கும் கேள்விகளில் இரண்டு அப்படியே இராமானுஜர் அத்வைதத்தின் மீது வைக்கும் ஆட்சேபங்களே.  :-)

  • ஏன் பிரபஞ்ச ப்ரக்ஞையிலிருந்து அந்நியப்படுத்த ப்ரக்ஞை பிரிந்தது?-என்ற கேள்வி அறிவே ஆன ப்ரம்மத்தில் எவ்வாறு அவித்யை மூடி ஜீவாத்மா வாக தோன்றுகிறது எனும் ஆட்சேபமாகும்.
  • உள்ளுறை பிரபஞ்ச ப்ரக்ஞையின் வடிவமைப்பு ஸ்தூல உடம்பின் வடிவமைப்பை ஒத்ததா? இல்லையென்றால் அதன் வடிவமைப்பு என்ன?

ப்ரம்மம் நிர்குணமா? அவ்வாறு இருந்தால் சாமான்ய தளமான வ்யவாரிக சத்தியத்தில் அத்யாசம் எனப்ப்டும் மேல்பதித்தல் நிகழ்வத எங்ஙனம்?

இவையிரண்டு ஆட்சேபங்களுக்கு பெர்னார்டோ பெளத்த தத்துவங்களை துணை கொண்டே எதிர்கொள்கிறார், சங்கரர் பிர்சன்ன பௌத்தராயிற்றே! :-)

இந்த விவாதமும் எல்லா தத்துவ விசார்ங்களை போல் மீமாம்சத்தில் (அதாவது ஒரு சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது) என்பதில் மையம் கொள்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த விவாதம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

இடையே ஒரு நம்மை போல ஒரு பாவ ஆத்மா என்றாவது ஒரு நாள் இதில் ஏதாவது ஒரு தத்துவம் உறுதி செய்யப்பட்டு பிரபஞ்ச உண்மை கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.

தங்க புத்தகம் கதையை ஆங்கில மொழியாக்கம் சீக்கிரம் செய்ய வேண்டும். :-)

நன்றி,

முத்து

தங்கப்புத்தகம் வாங்க


 

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை வான்நெசவு முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை தேவி – முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை எழுகதிர் முன்னுரை முதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரை தங்கப்புத்தகம் முன்னுரை
முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் போர்ட்லாண்ட் திரையிடல்
அடுத்த கட்டுரைஅறிவின் பரவல்-கடிதம்