உடல், உள்ளம் – கடிதங்கள்

அறிவியக்கவாதியின் உடல்

உடல், குற்றவுணர்வு, கலை

உடல்நான்

கலைஞனின் உடல்

உடல்மனம்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் அவ்வப்போது ஒரு பொதுவிவாதம் போல ஒன்று தன்னிச்சையாகத் தொடங்கிவிடுகிறது. ஓரினச்சேர்க்கை, தூக்கம் இப்ப்படி ஏதாவது ஒரு தலைப்பில். அது விரிந்து விரிந்து பல தளங்களைத் தொட்டு முடிகிறது. அவ்வாறு வந்த ஒரு நல்ல விவாதம் பெண்களின் உடல், நம் உடல் சார்ந்த அடையாளம் பற்றியது. பல கோணங்களில் அந்த கேள்விகளும் பதில்களும் இருந்தன.

நம்மை நம் உடல் என நினைப்பதிலிருந்து நாம் தப்பவே முடியாது. ஏனென்றால் நாம் நம் உடலின் வலிகள், மகிழ்ச்சிகள், வேட்கைகள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறோம். ஆகவே உடலின் அவமதிப்பையும் கசப்பையும் கடக்கவும் முடியாது. ஆனால் உடலில் இருந்து கொஞ்சமேனும் விடுதலை அடையாமல் நாம் ஆழமான ஆன்மிக உண்மைகள் எவற்றையுமே அறிய முடியாது. ஆகவே உடலல்ல நான் என்று நமக்கு நாமே சொல்லிச் சொல்லி உள்ளத்தை உடலில் இருந்து பிரித்து உருவகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளம் அப்படி உருவகம் செய்துகொண்டால் அப்படி தோற்றம் கொள்வதுதான்

ராஜ் முகுந்த்

***

அன்பு ஜெ,

உடல் சார்ந்த தொடர் கடிதங்கள் படித்து வருகிறேன். வேதாந்த பார்வைவை வேறு கோணத்தில் வார்த்தைகளில் சொன்னது புதிய திறப்பு. உடல் – புரிகிறது. உடலின் தேவைகளில் ஆழ்ந்து சிக்கி கொள்ளாமல், உடல் மட்டும் நான் என இல்லாமல், உடலை மட்டும் மையம் கொண்டோ அல்லது முழுதும் துறத்தல் என்று உதாசீனப்படுத்தியோ செல்லாமல், வாகனம் எனும் அளவில், உணர்தலுக்கும் பயணத்திற்கும் என அதன் இருத்தல் புரிகிறது. உடல் எனும் கருவி கொண்டு அறிதல் நடக்கிறது என்பதும் தெரிகிறது.

ஆனால் மனம் என்பதின் வழி அறிதல் எங்கனம்? தண்ணுணர்வு வரும் போது மனம் “அறிதல் ” என நிகழ்வது தெரிகிறது. மிக பெரும்பாலும் மனம் எனும் எண்ண ப்ரயாகத்தில், ஒவ்வொரு கணமும் அதன் ஓயா கூச்சலில் அலைகலந்தபடிய இருக்க, அதை தாண்டியபடி என்பது மங்கலாக இருக்கிறது. என்னுடன் இருத்தலாக இருக்கும் ஒரு தன்மையை – முற்றிலும் இல்லாத கணங்கள் – என்பதை எப்படி ஒரு நாளின் பெரும்பகுதி ஆகும் என்பது தடுமாறுகிறது.

ஆத்மாவின் வெளிபடும் நிலைகளில் எதிலும் சிக்காமல் அல்லது பட்டும் படாமல் அல்லது இவைகளில் அறிந்து – பின் தாண்டியபடி அதன் பாதையில் செல்வது பற்றி தொகுத்து கொள்ள முடியவில்லை. எண்ணின் ஒரு நாள் என்பது நீங்கள் சொன்ன உடல், பிராண, மன உலகினுள் மாறி இருக்கும் சஞ்சாரங்களில் எனும்போது, எப்படி முழுமையான அறிதலும் என்றென்றும் அதன் இருப்பில் என்பதை ஒரு குறிக்கோள் என கொள்ள முடியும்? எவ்விதம் என்னுள் சேரும், சேர்ந்தபடி இருக்கும் மன இருப்புகளை தாண்டும் விதங்கள்.

அன்புடன்,

லிங்கராஜ்

குற்றவுணர்வும் கலையும்-கடிதம்

இரு பெண்களின் கடிதங்கள்

முந்தைய கட்டுரைமுதற்காதலின் பொன்மணிக்கிளை
அடுத்த கட்டுரைமரபிலக்கியம் – கடிதம்