தளிர்வலையோ?

எழுபதுகளில் கேரளத்தை ஆட்கொண்ட பாடல்களில் ஒன்று  “தளிர்வலையோ?” இன்றும் அந்த மயக்கம் நீடிக்கிறது. இன்றைய குஞ்சாக்கோ போபனின் அப்பா குஞ்சாக்கோ இயக்கிய தோல்விப்படமான சீனவலையில் வரும் இப்பாடல் பின்னர் தொலைக்காட்சி வழியாக பெரும்புகழ்பெற்றது. காரணம் ஒளிப்பதிவாளராகிய பாலு மகேந்திரா.

சீனவலை செம்மீனுக்கு போட்டியாக எடுக்க முனைந்த ஒரு படம். ஆகவே பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். செம்மீனின் மார்க்கஸ் பட்லேவுக்கு சமானமாகவே இருந்தது பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு. கடலும் காயல்கரைகளும் அற்புதமான காட்சியெழிலுடன் இருந்தன. பூந்துறையில் அரையன்றே பாட்டில் ஒழுகிச்செல்லும் காயல்கரை ஒரு கனவு போலிருந்தது அன்று. இந்த ஒளிப்பதிவில் இயற்கையாகவே கொண்டுவரப்பட்டிருக்கும் வண்ணச்சேர்க்கையும் அன்று ஒரு சாதனை.

அத்துடன் அண்மைக்காட்சிகள். அன்று அவை மிக அரிது. அதிலும் ஒப்பனையில்லாத முகம் கொண்ட கதைநாயகியின் மிக அண்மைக்காட்சியிலேயே ‘பூந்துறையில் அரையன்றே’ பாடலை பெரும்பாலும் கொண்டுசென்ற பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு அன்று மிகவும் வியக்கப்பட்டது.

டெலிஸூம் வைத்து எடுக்கப்பட்டது அக்காட்சி. படகில் செல்பவர்களை இன்னொரு படகில் இருந்து எடுக்க முடியாது. காமிரா அசையும். மிகத்தொலைவில் ஆழமாக சேற்றில் நடப்பட்ட மேடையில் காமிரா அசையாமல் நிறுத்தப்பட்டு அக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. ஆகவே ஜெயபாரதி இயல்பாக மிகையே இல்லாமல் நடிக்கிறார். ஆனால் டெலிஸூம் காட்சிகளில் இருக்கும் துல்லியமின்மை, சீரற்ற ஒளி ஆகியவை இக்காட்சிகளில் இல்லை.

பாலு ரசித்துக் கொண்டாடி ஜெயபாரதியை படம்பிடித்திருப்பதை பாலுவை அறிந்தவர்கள் புன்னகையுடன் உணர முடியும். அதை நான் பின்னர் பாலுவிடம் சொன்னேன். “தோஸ் ஆர் த டேய்ஸ் மேன்” என்றார்.

தளிர்வலயோ தாமரவலையோ
தாலிப்பொன்
வலையோ
நின்
சிருங்காரச் சிப்பியில் வீணது
ஸ்வப்ன
வலயோ புஷ்பவலயோ?
வேம்பநாட்டு காயல்கரையில்
வெயில்பிறாவு
சிறகுணக்கும்
சீனவலைக்கு
அரிகில்
அரிகில்
அரிகில் சீனவலைக்கரிகில்
ஆடிவா
அணிஞ்ஞு வா பெண்ணாளே
நாளே
ஆரியங்காவில் நம்முடே தாலிகெட்டு
ஆயிரம்
பூபாலிகையிலே சிந்தூரம்
சூடிவராம்.
போயி வராம்

வெள்ளிபூக்கும் ஆற்றின் கடவில்
விளக்கு
மாடம் கண்ணெறியும் பூந்தோணிப் படவில்
படவில்
படவில் பூந்தோணிப்படவில்
பாடிவா
பறந்நுவா பெண்ணாளே
நாளே
பாதிரா மணலில் நம்முடே ஆத்ய ராத்ரி
ஆயிரம்
ராவுகள் தேடிய ரோமாஞ்சம்
சூடி
வராம், போயி வராம்

ஏசுதாஸ்

எம்.கே.அர்ஜுனன்

வயலார் ராமவர்மா

தளிர்வலையோ தாமரை வலையோ
தாலிப்பொன்
வலயோ
உன்
சிருங்கார சிப்பிமேல் விழுந்தது
சொப்பன
வலையோ புஷ்ப வலையோ?

வேம்பநாட்டு காயல்கரையில்
வெயில்புறா
சிறகு உலர்த்தும்
சீனவலைக்கு
அருகே
அருகே
அருகே சீனவலைக்கருகே
ஆடிவா
அணிகொண்டு வா பெண்ணே
நாளை
ஆரியங்காவில் நமது தாலிகட்டு
ஆயிரம்
பூத்தாலங்களிலுள்ள செந்தூரத்தைச்
சூடிவருவோம்
போய் வருவோம்.

வெள்ளிபூக்கும் ஆற்றின் படித்துறையில்
தூண்விளக்கு
கண் சுழற்றும் பூந்தோணித் துறையில்
துறையில்
துறையில் பூந்தோணித் துறையில்
பாடிவா
பறந்நுவா பெண்ணே
நாளை
நள்ளிரவு மணல்வெளியில் நம் முதலிரவு
ஆயிரம்
இரவுகள் தேடிய மெய்சிலிர்ப்பை
சூடிவருவோம்
போய் வருவோம்

பூந்துறையில் அரையன்ரே பொன்னரயத்தி

புஞ்சிரி கொண்டொரு பொட்டு குத்தி

ஈ புஞ்சிரி ஈ புஞ்சிரி கொண்டொரு பொட்டு குத்தி

புடவையும் மாலயும் வாங்ஙும் மும்பே

புருஷன்றே சூடுள்ள முத்து கிட்டீ

பூகொண்டு மூடிய புறம் வேலி உள்ளொரு

புழக்கரை அம்பல நடையில்

இந்நு கல்விளங்கின்றே கண்முன்பில் நம்முடே கல்யாணம்

பின்னே எல்லாம் கழிஞ்ஞு வருந்நதோர்க்கும்போள்

எங்ஙாண்டு எங்காண்டு வருந்நுண்டொரு நாணம்

காயலின் பொக்கிளில் கைவிரல் ஓடிச்சு

களிவஞ்சி துழவும் நிலாவே

நின்றே கல்யாண யாத்ரயும் உல்லாச யாத்ரயும் இந்நாணோ

பின்னே நாளே உறக்கச்சடவுமாய் காலத்து

நாலாளு காணும்போள் களியாக்கும்

[தமிழில்]

பூந்துரை மீனவனின் பொன்னான மீனவப்பெண்

புன்னகையால் ஒரு பொட்டுவைத்துக் கொண்டாள்

புன்னகையால் புன்னகையால் ஒரு பொட்டு வைத்துக் கொண்டாள்.

புடவையும் மாலையும் வாங்குவதற்கு முன்னரே

புருஷனின் சூடான முத்தை பெற்றுக்கொண்டாள்.

பூவால் மூடிய புறவேலி உள்ள ஒரு

ஆற்றுக்கரை ஆலய முகப்பில்

இன்று கல் விளக்கின் கண் முன்னால் நம் கல்யாணம்

பின்னர் எல்லாம் முடிந்து வருவதை நினைக்கையில்

எங்கிருந்தோ எங்கிருந்தோ வரும் ஒரு நாணம்

காயலின் தொப்புளில் கைவிரல் சுழித்து

களித்தோணி ஓட்டும் நிலாவே

உனது கல்யாண யாத்திரையும் உல்லாச யாத்திரையும் இன்றா என்ன?

பின்னர் நாளை உறக்கக் களைப்புடன் காலையில் வந்து

நாலுபேர் காண்கையில் கேலிசெய்வார்களே?

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள்
அடுத்த கட்டுரைதிசைதேர்வெள்ளம்- கடிதங்கள்