வெண்முரசு ஒரு நுழைவாயில்

அருண்மொழி வெண்முரசு குறித்து பேசியிருக்கும் இரண்டு காணொளிகள் வெளியாகியிருக்கின்றன. இரண்டாவது காணொளி இன்று வெளியாகியிருக்கிறது. இதிலுள்ள எந்தக் கருத்தையும் என்னிடம் இதுவரை சொன்னதில்லை. திருமணமான ஆரம்பகாலங்களில் அதிதீவிரமான இலக்கியவிவாதங்கள் செய்திருக்கிறோம். அதன்பின் சின்னவிஷயங்கள், கேலி கிண்டல் மட்டும்தான். அவள் வாசித்தவற்றை கேட்டு தெரிந்துகொள்வேன். அவள் சான்றிதழ் அளித்த நூல்களை மட்டுமே வாசிப்பது என்று நெடுங்காலம் இருந்தேன். இப்போது மேலும் சிலர் அவ்வரிசையில் இருக்கிறார்கள். அருண்மொழி பொதுவாக மிகமென்மையாக தன் கருத்துக்களைச் சொல்வதுபோலிருக்கும். கடுமையாகச் சொல்லியிருக்கிறாள் என கொஞ்ச காலம் கழித்து தெரியும். நல்ல வேளையாக இதில் நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறாள்…

வெண்முரசு ஒரு நுழைவாயில்

முந்தைய கட்டுரைஅறிவின்பாதை, கனவின் பாதை- கடிதம்
அடுத்த கட்டுரைகடவுள்,தொன்மம்,சில வினாக்கள்